Thenga Coco Success Story - தென்னை மரம் மற்றும் தேங்காய் கழிவுகளை பயன்படுத்தி அலங்கார பொருட்கள் மற்றும் அத்தியாவசிய பொருள்கள் தயாரிப்பில் ஈடுபட்டு கேரள பெண் ஒருவர் கலக்கி வருகிறார்.
Thenga Coco Success Story - பொதுவாக கலைவண்ணங்கள் என்பது ஓவியமாகவோ, பொருட்களாகவோ, எழுத்துக்களாகவோ இருக்கும், ஆனால் ஒரு கழிவுகளையே கலை வண்ணம் ஆக்க முடியும் என கேரளாவைச் சேர்ந்த மரியா குரியாகோஸ் நிரூபித்து இருக்கிறார், பொதுவாக இவர் தேங்காய் மற்றும் தென்னை மர கழிவுகளை சேர்த்து வைத்துக் கொண்டு அதில் இருந்து தனது கலைவண்ண பொருட்களை தயாரித்து வருகிறார்,
மரியா குரியாகோஸ் இவர் ஒரு வணிகவியல் பட்டதாரி, மும்பையில் பிரபல நிறுவனம் ஒன்றில் நல்ல சம்பளத்தில் பணி புரிந்து தான் வந்தார், ஆனாலும் இவருக்குள் ஒரு தொழில்முனைவோர் ஆசை இருந்து கொண்டே இருந்திருக்கிறது, கேரளா என்றாலே ஒவ்வொரு வீட்டில் தென்னை நிறையவே பார்க்கலாம், தென்னை என்றாலே ஒரு கற்பக விருட்சகம்.
தென்னையில் தனது அனைத்து விளை பொருட்களையும் அத்தியாவசியங்கள் ஆக்க கூடியது, அந்த வகையில் அந்த தென்னை மரத்தின் உதிரிகளை வைத்துக் கொண்டு இயற்கையாக கலைப்பொருள்களை தயாரிக்கலாம் என மரியா முடிவெடுக்கிறார், கொஞ்சம் காம்ப்ளக்ஸ் ஆன தொழில் தான் என்றாலும் கூட தைரியமாக களம் இறங்கினார்,
கலைப் பொருள்களை வித்தியாசம் வித்தியாசம் ஆக தயாரித்து தேங்கா கோகோ என்ற பெயரில் ஈ காமர்ஸ் மூலம் முதலில் தனது கலைப் பொருள்களை சந்தைப்படுத்தினார், கொஞ்சம் கொஞ்சமாக வரவேற்பு கிடைத்தது, பின்னர் தனது கலைப்பொருள்களை ஒரு அவுட்லெட் வைத்து சந்தைப்படுத்தினார், தற்போது மாதத்திற்கு 5000 கலை பொருட்கள் வரை சந்தைப்படுத்தி வருகிறார்.
" தற்போது 18 கைவினை கலைஞர்கள், 12 பெண்கள், 6 ஆண்கள் இவர்கள் நிறுவனத்தில் பணி புரிந்து வருகிறார்கள், மாதத்திற்கு 8 இலட்சம் என, வருடத்திற்கு ஒரு கோடி வரை இந்த தேங்காய் கழிவுகள் மூலம் வருமானம் ஈட்டி வருகிறார் "