Lijjat Papad: An Inspirational Journey - வெறும் 80 ரூபாய் முதலீட்டில் ஆரம்பித்த ஒரு அப்பள தொழில் எப்படி 1600 கோடி மதிப்பிலான சாம்ராஜ்யமானது என்பது குறித்து பார்க்கலாம்.
மும்பையில் கொஞ்சம் கூட்ட நெரிசல் மிக்க பகுதி அது, அங்கு ஒரு சிறிய அடுக்குமாடி குடி இருப்பில் வசித்து வந்த 7 பெண்கள், 1959 ஆம் ஆண்டு அவர்களது மொட்டை மாடியில் உட்கார்ந்து கதை பேசிக் கொண்டே ஒரு தொழில் ஆரம்பிப்போம் என்ற முடிவை எடுக்கின்றனர், வெறும் 86 ரூபாய் முதலீடு செய்து, அதே மாடியில் உட்கார்ந்து அரிசி அவித்து, அரைத்து அப்பளம் செய்ய ஆரம்பித்தனர்.
அதிகப்படியான குடும்பங்கள் அந்த பகுதிகளில் வசித்ததால் இவர்களது அப்பளம் அவர்களிடையே சந்தைப்படுத்தாமலே மிக பிரபலமானது, பின்னர் 7 பேரும் இணைந்து முழு மூச்சாய் அப்பள தொழிலில் இறங்கினர், தங்கள் பகுதிகளில் மட்டும் அல்லாமல் பிற பகுதிகளுக்கும் சென்று அப்பளங்களை சந்தைப்படுத்தினர், அங்கும் இவர்களது அப்பளங்களுக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது.
பின்னர் லிஜ்ஜட் அப்பளம் என்ற பெயரில் தங்கள் தொழிலை நிறுவனமாக மாற்றி பல பெண்களுக்கு இவர்களது நிறுவனத்தில் தொழில் பயிற்சி அளித்து உற்பத்தியையும் பெருக்கினர், இவர்களது தயாரிப்புகள் ஏரியாக்கள் தாண்டி, நகரங்கள் தாண்டி, மாவட்டங்கள் தாண்டி, மாநிலங்கள் தாண்டி, கடல் தாண்டி என அயல் நாடுகளுக்கும் செல்ல ஆரம்பித்தது.
மசால் பொடிகள், அப்பளங்கள், சோப்புகள், டிடர்ஜெண்டுகள் என தங்கள் தயாரிப்பை விரிவுபடுத்தினர், அரசின் காதி மற்றும் கிராமப்புற தொழில் அமைப்புகளிடம் இருந்து இவர்களுக்கு அங்கீகாரம் கிடைத்தது, இன்று 83 கிளைகளை தேசம் முழுக்க கொண்டு இருக்கிறார்கள், 45,000 பெண்களுக்கு வேலை அளிக்கிறார்கள், 83 ரூபாயில் ஆரம்பித்த தொழிலை 1600 கோடி சாம்ராஜ்யமாக மாற்றி இருக்கிறார்கள்.
" எல்லாமே அந்த 7 பெண்கள் இணைந்து உருவாக்கிய அந்த 86 ரூபாய் முதலீட்டில் ஆரம்பித்தது தான், அவர்களது இந்த வளர்ச்சி பெண் தொழில்முனைவோர்களுக்கு ஒரு ஊக்கமாய் எப்போதும் இருக்கும் "