• India
```

66 வயதில் KFC...தொழில் முனைவதற்கு வயது தடையில்லை...என்பதை உணர்த்திய டேவிட் சாண்டர்ஸின் வெற்றிப் பயணம்...!

KFC Success Story​ | Business Success Stories in Tamil

By Ramesh

Published on:  2024-12-04 19:14:55  |    172

KFC Success Story​ - தனது 66 வயதில் KFC என்னும் மாபெரும் சாம்ராஜ்யத்தை உருவாக்கிய ஹார்லேண்ட் டேவிட் சாண்டர்ஸ்சின் வெற்றிப் பயணம் குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

KFC History And Success Story - வயது 30 ஆகி விட்டது இனிமே தொழிலை பற்றி எப்படி யோசிக்க, என யோசித்துக் கொண்டே இருக்கும் இளைஞர்கள் மத்தியில், ஒரு மனிதர் தனது 66 வயதில் KFC என்னும் மிகப்பெரிய சாம்ராஜ்யத்தை உருவாக்கி அதை உலகம் முழுக்க விரிவுபடுத்தி இருக்கிறார் என்றால் அவருக்கு அந்த 66 வயதில் தொழிலின் மீது எவ்வளவு பிரியம் இருந்து இருக்க வேண்டும்.

டேவிட் சாண்டர்ஸ் ஒரு ஏழ்மையான குடும்பத்தில் 1890 ஆம் ஆண்டு பிறந்தார், 5 வயதிலேயே தந்தையை இழந்தவர், அதற்கு பின் அம்மா பணிக்கு சென்று விடுவதால் சமையல் முதல் வீட்டை பார்த்துக் கொள்வது வரை அனைத்தும் டேவிட் சாண்டர்ஸ் பார்த்துக் கொள்ளும் நிலை, டேவிட் சாண்டர்ஸ் தனது 7 வயதிலேயே முதல் சமையலை செய்ய துவங்கி விட்டார்.



அதற்கு பின் கொஞ்ச நாள் ரயில்வே பணியாளர், காப்பீடு விற்பனையாளர், பெட்ரோல் பங்க், ஹோட்டல் வேலை என பல வேலைகளை செய்து கொண்டு இருந்தார், பின்னர் அவரது 40 வயதில் தனியாக ஒரு சாலையோர உணவகம் ஒன்றை கென்டக்கியில் துவங்கினார், அந்த உணவகத்தில் அவர் தயாரிக்கும் பொறித்த சிக்கனை சாப்பிட வேண்டும் என்றே பலரும் அந்த கடைக்கு வந்து சென்று இருக்கிறார்கள்.

பின்னர் தனது சிக்கன் தயாரிப்பு நுட்பத்தை விரிவுபடுத்த எண்ணிய சாண்டர்ஸ் 1955 ஆம் ஆண்டு ஒரு காரை எடுத்துக் கொண்டு பல ஹோட்டல்களுக்கு சென்று தனது ஐடியாவை கூறினார், எல்லா ஹோட்டல்களும் அவரது ஐடியாவை நிராகரித்தன, முயற்சியை கை விடாமல் தொடர்ந்து அலைந்து திரிந்தார், பின்னர் ஒரே ஒரு ஹோட்டல் மட்டும் சாண்டர்ஸ்சின் ஐடியாவிற்கு செவி சாய்த்தது.



அந்த ஹோட்டலும் டேவிட் சாண்டர்ஸின் அந்த பொறித்த சிக்கன் மூலம் வழக்கமான வருமானத்தை விட பன்மடங்கு இலாபம் பார்த்தது, அதை பார்த்த மற்ற ஹோட்டல் காரர்களும் அதற்கு பின் சாண்டர்ஸிடம் வந்து அந்த சிக்கன் நுட்பங்களை கேட்க துவங்கினர், அவ்வாறாக விரிவடைந்து விரிவடைந்து இன்று 145 நாடுகளில், இருபதாயிரத்திற்கும் மேற்பட்ட உணவு நிறுவனங்களை கொண்டு இருக்கிறது.

Business Success Stories in Tamil -உலகின் மிகப்பெரிய உணவுச்சங்கிலி நிறுவனமாக KFC தற்போது செயல்பட்டு வருகிறது, டேவிட் சாண்டர்ஸ் 1964 ஆம் ஆண்டு KFC உரிமத்தை 2 மில்லியன் டாலருக்கு விற்று விட்டு, பின் காலத்தில் அதன் விளம்பர தூதராக மட்டும் செயல்பட்டு வந்தார், 1980 ஆம் ஆண்டு கடுமையான லூக்கிமியா நோயால் பாதிக்கப்பட்டு தனது 90 வயதில் மரணம் அடைந்தார்.