• India
```

மூடப்படும் நிலையில் இருந்த டெஸ்லா...ஆண்டுக்கு 100 பில்லியன் டாலர் வருமானம் தரும் நிறுவனம் ஆக மாறியது எப்படி...?

Tesla Survival Story

By Ramesh

Published on:  2025-02-15 23:41:53  |    60

The Journey of Tesla's Survival Since 2010 - 2010 யில் மூடப்படும் நிலையில் இருந்த டெஸ்லா, தற்போது 100 பில்லியன் டாலர் வருமானம் தரும் நிறுவனம் ஆக மாறியது எப்படி என்பது குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

கடந்த 2010 யில் எலான் மஸ்க் அவர்களின் டெஸ்லா கிட்டத்தட்ட 154 மில்லியன் டாலர் அளவிற்கான இழப்புகளை சந்தித்தது, கிட்டத்தட்ட நிறுவனத்தை இழுத்து மூடும் நிலை தான், ஆனால் தற்போது 2025 யில் அதே டெஸ்லா நிறுவனம் வெறும் 6 நாட்களில் 154 மில்லியன் டாலர் வருமானத்தை ஈட்டி வருகிறது, வருடத்திற்கு 100 பில்லியன் டாலர் வருமானம் ஈட்டி வருகிறது.

எப்படி மூடப்படும் நிலையில் இருந்த நிறுவனத்தை எலான் மஸ்க் மீட்டார் என்றால் அதற்கிடையில் பல போராட்டங்கள் இருக்கின்றன, டெஸ்லா மூடப்படும் நிலைக்கு தள்ளப்பட்டதற்கும் அவர் தான் காரணம், டெஸ்லா இன்று உலகளாவிய அளவில் தலை சிறந்த நிறுவனம் ஆக மாறி 100 பில்லியன் டாலர் அளவிற்கு வருமானம் ஈட்டுவதற்கும் எலான் மஸ்க் தான் காரணம்.



பொதுவாக ஒரு புதுமையை இழப்புகள் இல்லாமல் கண்டு பிடித்திடவே முடியாது, 16 வயதில் பல்கலைக் கழகத்தின் Entrance Exam யில் பெயில் ஆன ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் தான் இயற்பியலில் பல கண்டு பிடிப்புகளுக்கு இன்று காரணமாக அமைந்து இருக்கிறார், அந்த வகையில் எலான் மஸ்க்கும் அந்த வகை தான், தோல்வியை கண்டு எலான் மஸ்க் ஒரு போதும் துவண்டதில்லை.

அவரது ஆர்வம், புதுமைகளை கண்டுபிடிக்க அவர் தன்னை ஈடுபடுத்திக் கொள்ளும் முனைப்பு, அவரது திறன், விடா முயற்சி, அதீத உழைப்பு என இவை எல்லாம் சேர்ந்து தான் அவரை இன்று உலகின் நம்பர் 1 நிலையில் வைத்து இருக்கிறது, அவரால் தோல்வியில் இருந்து மீளவும் முடியும், யாரும் அடைய முடியாத வெற்றியும் பெற முடியும். அது தான் எலான் மஸ்க்.