• India

பதிமூன்றாயிரம் முதலீட்டில் ஆரம்பித்து...இன்று கோடிகளில் புரளும்...ஹட்சன் நிறுவனத்தின் கதை...!

Hatsun Agro History In Tamil

By Ramesh

Published on:  2025-01-03 14:58:45  |    69

Hatsun Agro History In Tamil - விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள திருத்தங்கல் என்ற கிராமத்தை சேர்ந்தவர் தான் சந்திர மோகன், ஒரு பெரிய பின்புலம் ஏதும் இல்லாத குடும்பம் தான், இக்கட்டான சமயத்தில் தன் குடும்ப சூழலை கருத்தில் கொண்டு படிப்பை பாதியிலேயே நிறுத்தி விட்டு, சிறிய சிறிய வேலைகள் அங்கும் இங்குமாக செய்து குடும்பத்திற்காக உழைத்து வந்தார் சந்திர மோகன்.

அவர் எவ்வளவு உழைத்தாலும் ஒரு திருப்தி இல்லாத சூழல் இருந்தது, அவருக்கு தொழில் செய்யும் விருப்பம் வந்தது, அப்போது அவருக்கு வயது 21 இருக்கும், தன்னுடைய ஆசைய குடும்பத்திடம் கூறவே, அவர்களிடம் இருந்த குடும்ப சொத்து ஒன்றை ரூ 13,000 ரூபாய்க்கு விற்று தங்களது முதல் நிறுவனத்தை 1970 காலக்கட்டங்களில் துவக்குகின்றனர், 



பால் சம்பந்தப்பட்ட பொருள்களை தயாரித்து சந்தையில் ஒரு குறிப்பிட்ட நன்மதிப்பை பெற்றனர். பின்னர் 1986 ஆம் ஆண்டு ஹட்சன் நிறுவனமாக சந்தையின் உருவெடுத்து, தமிழகமெங்கும் பொருட்கள் விநியோகம் செய்யும் உரிமையை பெற்றனர், தொடர்ந்து மார்க்கெட் குறித்த நிலையை உணர்ந்து சந்திரமோகன் அவர்கள் தீவிரமாக நிறுவனத்திற்காக உழைத்தார்.

இலாப நோக்கத்திற்காக செயல்படமால், தரத்தின் மீது மட்டும் நம்பிக்கை வைத்து செயல்பட்டதால், அருண், ஆரோக்யா, ஹட்சன் என நிறுவனம் 38 நாடுகளில் விரிவுபடுத்தப்பட்டது, 3000 க்கும் மேற்பட்ட அவுட்லெட்கள் உருவாக்கப்பட்டது, இன்று இந்தியாவின் மிகப்பெரிய டெய்ரி நிறுவனமாக ஹட்சன் வளர்ந்து இருக்கிறது, சந்திரமோகன் பில்லியனர் ஆக உருவெடுத்து இருக்கிறார்.

" உழைப்பும் தரமும் இருந்தால் சிறிய முதலீட்டை கூட சர்வதேச நிறுவனமாக உயர்த்த முடியும் என்பதற்கு சந்திரமோகன் அவர்களே சான்றாக இருக்கிறார் "