• India

DMart History | எளிய விலையில் எளிய மக்களுக்கான ஹைப்பர் மார்க்கெட்...எப்படி உருவானது...!

DMart History Tamil

By Ramesh

Published on:  2024-12-24 18:13:17  |    86

DMart History Tamil - இந்த கதை என்பது ஜீரோவில் ஆரம்பிக்கவில்லை...வேண்டுமானால் மில்லியனில் இருந்து பில்லியன் ஆன கதை என்று சொல்லலாம். இந்த கதையில் ஹீரோ என்பவர் ராதாகிஷன் தாமணி என்பவர் தான், மும்பையில் உள்ள ஒரு பிரபல பல்கலையில் வணிக பிரிவை படித்துக் கொண்டு இருந்தவர் குடும்ப சூழ்நிலைகளால் படிப்பை முதல் வருடத்திலேயே நிறுத்தினார்.

பின்னர் அவர் தந்தை பார்த்து வந்த பால் பியரிங் தொழிலை கையில் எடுத்து நடத்தி வந்தார், அவர் தந்தையின் மறைவுக்கு பின்னர் முழுக்க முழுக்க டிரேடிங்கில் உள்ள ஆரவத்தில் மார்க்கெட்டில் களம் இறங்கினார், மார்க்கெட்களில் நிலவரங்களை துல்லியமாக கணித்து முதலீடுகளை சரியாக பயன்படுத்தி மில்லியன் கணக்கில் இலாபம் பார்த்து வந்தார்.


ஒரு கட்டத்திற்கு பின்னர் தான் இவருக்கு இந்த ஹப்பர் மார்க்கெட் ஐடியா தோன்றுகிறது, முதலில் கூட்டுறவு அங்காடிகளை எடுத்து நடத்த நினைக்கிறார், ஆனால் அதற்குள் இருக்கும் கட்டுப்பாடுகள் இவரை சுதந்திரமாக செயல்படவில்லை என்பதால் மும்பையில் தனது கட்டுப்பாட்டில் இயங்கும் முதல் ஹைப்பர் மார்க்கெட்டை தோற்றுவித்தார். இன்று 377 மையங்களில் DMart செயல்பட்டு வருகிறது.


ராதாகிஷணின் DMart கொள்கைகள் மிகவும் குறுகியது தான், முதலில் சொந்த கட்டிடம், மிக மிக அத்தியாவசியங்கள் மீது மட்டும் பார்வை, எளிய விலை, இலாப குறைப்பு இவ்வளவு தான் அவரது டிமார்ட்டை தேசம் முழுக்க விரிவடைய செய்ய அவர் பயன்படுத்திய கொள்கைகள், அவர் திறந்த எந்த ஹைப்பர் மார்க்கெட்டையும் இன்றளவும் மூடியதில்லை, காரணம் இந்த கொள்கைகள் தான்.

" அன்று டிரேடிங்கில் மில்லியன்களை பார்த்தவர், இன்று டிமார்ட் மூலம் பில்லியன்களை பார்க்கிறார், ஷார்ட்டாக சொல்ல வேண்டுமானால் ஏற்கனவே ஹீரோவாக இருந்தவர், டிமார்ட் மூலம் பான் இந்தியா ஹீரோவாகி இருக்கிறார் "