• India
```

ஜீரோவில் ஆரம்பித்து...ரிலையன்ஸ் என்னும் சாம்ராஜ்யத்தையே உருவாக்கிய...திருபாய் அம்பானியின் கதை...!

Dhirubhai Ambani Success Story

By Ramesh

Published on:  2024-11-26 20:55:55  |    276

Dhirubhai Ambani Success Story - ரிலையன்ஸ் என்னும் சாம்ராஜ்யம் வெறும் 300 ரூபாய் சம்பளம் வாங்கிக் கொண்டு இருந்த ஒரு தனிமனிதனால் உருவாக்கப்பட்டது என்றால் நம்ப முடிகிறதா, ஆனால் அது தான் உண்மை.

Dhirubhai Ambani Success Story - திருபாய் அம்பானி, 1932 ஆம் ஆண்டு குஜராத்தில் ஒரு சாதாரண எளிய குடும்பத்தில் பிறந்தவர், அவரது அப்பா ஒரு கிராமத்து பள்ளியில் ஆசிரியர், அப்போது எல்லாம் ஆசியர்களுக்கு பெரிதாக வருமானம் ஏதும் இருக்காது, திருபாய் அம்பானி வீட்டின் நிலையை புரிந்து கொண்டு 10 வரை மட்டுமே படித்து, தனது 17 ஆவது வயதில் வீட்டிற்காக சம்பாதிக்க ஆரம்பித்தார்.

திருபாய் அம்பானியின் உறவினர் ஒருவர் ஏமன் நாட்டில் இருக்கவே, அவரின் மூலம் அம்பானி ஏமன் செல்கிறார், உறவினரின் உதவியுடன் அங்கு இருக்கும் ஒரு பெட்ரோல் பங்கில் பணியாளராக சேருகிறார், தினம் 10 ரூபாய் சம்பளம், மாதத்திற்கு 300 ரூபாய் சம்பளம், வேலை செய்து கொண்டே எப்போதும் ஏதாவது தொழிலை பற்றியே யோசித்துக் கொண்டு இருப்பாராம் திருபாய் அம்பானி.



ஓரு கட்டத்தில் இந்த வேலை நம்மை உயர்த்தாது என்பதை உயர்ந்த அம்பானி, அங்கு இருந்து கிளம்பி இந்தியா வருகிறார், ஒரு சிறிய அளவில் டெக்ஸ்டைல் தொழில், பாலிஸ்டர் நூல்கள் இறக்குமதி, மசாலா பொருள்கள் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி என இதன் மூலம் கொஞ்சம் இலாபம் பார்க்கிறார், பின்னர் மும்பையில் உள்ள ஒரு சந்தையில் ஒரு இடத்தை வாடகைக்கு எடுத்து அங்கு ஒரு நிறுவனத்தை துவங்குகிறார்,

அவர் நிறுவனம் துவங்கும் போது அந்த நிறுவனத்தில் இருந்தது இரண்டு சேர்கள், இரண்டு டேபிள்கள், ஒரு கணக்கு வழக்கு நோட்டு, ஒரு பேனா, இரண்டு ஊழியர்கள், மாதம் ஒரு 7,300 கையில் இலாபம், அது தான் நிலையன்ஸ் நிறுவனத்தின் அடித்தளம், இன்று 3.50 இலட்சம் ஊழியர்கள், 3 இலட்சம் கோடி வருமானம் எல்லாமே அந்த தினசரி 10 ரூபாய் உழைப்பில் இருந்து உருவாக்கியது தான்.

" கையில் எதுவுமே இல்லை எனினும் கூட ஒரு சாம்ராஜ்யத்தை உருவாக்க முடியும் என்பதற்கு திருபாய் அம்பானி ஒரு சிறந்த சான்று "