CavinKare Success Story - கெவின்கேர் (CavinCare) என்ற நிறுவனத்தை நிறுவிய தமிழர் சி கே ரங்கநாதன் குறித்து இந்த தொகுப்பில் முழுமையாக பார்க்கலாம்.
பொதுவாக இன்று ஷாம்பூக்கள் எல்லாம் 1 ரூபாய் பாக்கெட்டுகள், 2 ரூபாய் பாக்கெட்டுகளில் கிடைக்கிறது என்றால் அதர்கு வித்திட்டவர் சி கே ரங்கநாதன் அவர்களின் தந்தை சின்னி கிருஷ்ணன் தான். இவர் தான் முதன் முதலில் வெல்வெட் ஷாம்பு என்ற பெயரில் ஷாம்பூக்களை பாக்கெட்டுகளில் விற்றார், இவர் வித்திட்ட விதை தான் இன்று அனைத்து நிறுவனங்களும் ஷாம்பூக்களை பாக்கெட்டுகளில் விற்கின்றன.
1982 ஆம் ஆண்டு சின்னி கிருஷ்ணன் மறைவிற்கு பின்னர் தந்தையின் தொழிலை சி கே ரங்கநாதன் அவர்கள் கையில் எடுக்க வேண்டிய சூழல் ஏற்பட்டது, இவர்களுக்கு இது முதல் தலைமுறை தொழில் தான் என்றாலும் கூட சி கே ரங்கநாதன் தந்தையிடம் ஏற்கனவே கற்று இருந்த தொழில் பாடத்தையும், தனக்கே உரித்தான புதுமையையும் தொழிலில் புகுத்த நினைத்தார்.
ஒரு 15,000 ரூபாய் முதலீட்டை திரட்டி, ஷாம்பு பேக்கிங் மெசின்கள் எல்லாம் வாங்கி, 300 ரூபாய் வாடகைக்கு ஒரு இடத்தை பிடித்து, வெறும் நான்கு ஊழியர்களை வைத்து தொழிலை துவங்கினார், தந்தையின் பெயரை சுருக்கி சிக் (Chik) இந்தியா என்ற பெயரில் நிறுவனத்தை துவங்கினார், இவர் தயாரித்த ஷாம்பூ இவர் தந்தை தயாரித்த வெல்வெட் ஷாம்பூவிற்கே டஃப் கொடுத்தது.
முதல் ஆண்டிலேயே 20,000 பாக்கெட்டுக்களை விற்று தள்ளினார், 75 காசுகளுக்கு ஷாம்பூ விற்பனையை துவங்கிய இவர் இன்று வருடத்திற்கு 300 கோடி டர்ன் ஓவர் பார்க்கிறார், கெவின்கேர் என்ற மிகப்பெரிய சாம்ராஜ்யத்தை உருவாக்கி இருக்கும் சி கே ரங்கநாதன், சிக் ஷாம்பூ, மீரா சீயக்காய், ஸ்பின்ஸ் பவுடர், பால், பால் பவுடர்கள், அழகு சாதன பொருட்கள், உணவு ரகங்கள் என அனைத்து துறையிலும் கலக்கி வருகிறார்.
" என்ன தான் தந்தை தொழிலை எடுத்து நடத்தினாலும் கூட தந்தை போட்டது பிள்ளையார் சுழி மட்டும் தான், அதை இன்று தமிழகத்தின் மிகப்பெரிய தொழில் சாம்ராஜ்யமாக மாற்றிய பெருமை சி கே ரங்கநாதனை தான் சேரும் "