• India
```

பாஸ்கர்ஸ் புரன் போளி...அன்று தெரு தெருவாக போளி விற்றவர்...தன் அயராத உழைப்பால்...இன்று வருடத்திற்கு 18 கோடி வருமானம் ஈட்டுகிறார்...!

Bhaskars Puranpoli Ghar Startup Story

By Ramesh

Published on:  2025-01-30 19:54:11  |    62

Bhaskars Puranpoli Ghar Startup Story - 2015 யில் தெருவோரத்தில் பருப்பு போளி விற்றவர், இன்று இந்தியாவின் ஒரு கோடீஸ்வரர் என்றால் நம்ப முடிகிறதா, பாஸ்கர்ஸ் புரன் போலி குறித்து இந்த தொகுப்பில் முழுமையாக பார்க்கலாம்.

Bhaskars Puranpoli Ghar Startup Story - 2015 காலக்கட்டம், அவர் பெயர் பாஸ்கர், குடும்ப சூழ்நிலை கருதி பல வேலைக்கு செல்வார், அப்போது அவர் பார்த்த வேலை மட்டும் எட்டை தாண்டும், அவ்வாறாக தானே ஏதாவது செய்யலாம் என்று அவருக்கு தோன்றி இருக்கிறது, போளி செய்து விற்கலாம் என முடிவெடுத்து விட்டு தினசரி பருப்பு போளிகளை செய்து ஒரு தூக்கு வாளியில் சுமந்து கொண்டு தெருவெல்லாம் சென்று விற்பாராம்.

இவரது போளிக்கு வாடிக்கையாளர்களிடையே அமோக வரவேற்பு கிடைக்கவே, தெருவின் ஒரு மூலையை தேர்ந்து எடுத்து அங்கு உட்கார்ந்து இவரே போளிகளை சுட சுட செய்து விற்க துவங்கினார், அப்போதும் வாடிக்கையாளர்கள் அவரது இடத்தை தேடி வந்து வாங்கிச் சென்றனர், பின்னர் ஒரு கடையாக துவங்கலாம் என்று முடிவெடுத்து Dr DVG சாலை பெங்களுருவில் தனது முதல் கடையை திறக்கிறார்.



வியாபாரம் களை கட்ட துவங்கவே, போளியில் பல வகைகளை செய்து வித்தியாசங்களை காட்டினார், கூடவே தின்பண்டங்கள், ஊறுகாய், அப்பளங்கள், மசாலா வகைகள், ஸ்வீட்ஸ், உலர் பழங்கள் உள்ளிட்டவைகளும் போளியோடு சேர்த்து சந்தைப்படுத்தினார், 'Bhaskar's Puranpoli Ghar' என்ற பெயரில் முறையாக அவரது நிறுவனத்தை உரிமை முறைமை செய்தார்.

இன்று கர்நாடகா மற்றும் மும்பை என இரண்டு மாநிலங்களில் இவரது நிறுவனம் வெற்றி நடை போட்டு வருகிறது, பத்துக்கும் மேற்பட்ட அவுட்லெட்டுகள் வைத்து இருக்கிறார், மாதத்திற்கு ஒன்றரை கோடிக்கும் மேல் என, வருடத்திற்கு சராசரியாக 18 கோடி வருமானம் ஈட்டி வருகிறார், எந்த நிலையில் இருந்தாலும் உழைப்பு இருந்தால் எந்த உயரத்திற்கும் செல்லலாம் என்பதற்கு பாஸ்கரே சான்று.