• India
```

ரூ 40,000 சலுகை விலையுடன்...ஹீரோ விடா எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள்...!

Hero Vida Big Diwali Discount

By Ramesh

Published on:  2024-10-19 10:06:06  |    4331

Hero Vida Big Diwali Discount 2024 - டெல்லியை மையமாக கொண்டு செயல்பட்டு வரும் ஹீரோ நிறுவனம் வருடத்திற்கு 75 இலட்சம் பைக்குகளுக்கும் மேல் தயாரித்து உலகளாவிய அளவில் மிகப்பெரிய மார்க்கெட்டை உருவாக்கி சந்தைப்படுத்தி வருகிறது, கிட்டதட்ட வருடத்திற்கு முப்பத்து ஐந்தாயிரம் கோடி வருமானம் ஈட்டி வரும் ஹீரோ நிறுவனம் தற்போது பசுமை வாகனங்களின் தயாரிப்பிலும் ஈடுபட்டு வருகிறது.

VIDA என்னும் பெயரில் புதிய எலக்ட்ரிக் வாகனங்களை தயாரித்து வரும் ஹீரோ மோட்டோ கார்ப் நிறுவனம், தற்போது பண்டிகை கால ஆபராக கிட்டதட்ட 41,500 ரூபாய் வரை சலுகை விலை அளித்து வருகிறது, இந்த சலுகை விலை இந்தியா முழுக்க இருக்கும் அனைத்து ஹீரோ ஷோரூம்களிலும் தற்போதைக்கு செயலில் இருக்கிறது, குறைந்தபட்ச நாட்களே இருப்பதால் சலுகை விலையில் வண்டியை பெற உடனடியாக ஷோரும்களை அணுகலாம்.


சரி எந்தெந்த VIDA பைக்குகளுக்கு இந்த சலுகை கிடைக்கிறது?

VIDA V1 Pro:

1) பைக்கின் விலை 1,30,200 ரூபாய் (மாநிலத்திற்கு ஏற்ப மாறலாம்)

2) சிகப்பு, ஆரஞ்ச், வெள்ளை, கருப்பு, வான்நீலம் உள்ளிட்ட கலர்களில் கிடைக்கிறது

3) ஒரு சார்ஜ்க்கு 165 கி.மீ வரை செல்லக்கூடிய திறன் பெற்றது

4) அதிகப்ட்ச ஸ்பீடு 80 கி.மீ வரை செல்லும்

5) பேட்டரி கெபாசிட்டி 3.94 கிலோ வாட் பெர் ஹவர்

6) 2 ரிமூவபுள் பேட்டரிகளை கொண்டது

7) ஹீரோ சார்ஜ் ஸ்டேசன்ஸ்களில் 65 நிமிடத்தில் 80 சதவிகிதம் வரை சார்ஜ் ஏறக்கூடியது, இதற்காகவே நாடு முழுக்க 2500 சார்ஜ் ஸ்டேசன்களை உருவாக்கி இருக்கிறது ஹீரோ.


VIDA V1 Plus

1) பைக்கின் விலை 1,02,700 ரூபாய் (மாநிலத்திற்கு ஏற்ப மாறலாம்)

2) சிகப்பு, ஆரஞ்ச், வெள்ளை, கருப்பு, வான்நீலம் உள்ளிட்ட கலர்களில் கிடைக்கிறது

3) ஒரு சார்ஜ்க்கு 143 கி.மீ வரை செல்லக்கூடிய திறன் பெற்றது

4) அதிகப்ட்ச ஸ்பீடு 80 கி.மீ வரை செல்லும்

6) 2 ரிமூவபுள் பேட்டரிகளை கொண்டது

7) ஹீரோ சார்ஜ் ஸ்டேசன்ஸ்களில் 65 நிமிடத்தில் 80 சதவிகிதம் வரை சார்ஜ் ஏறக்கூடியது, இதற்காகவே நாடு முழுக்க 2500 சார்ஜ் ஸ்டேசன்களை உருவாக்கி இருக்கிறது ஹீரோ.

" இந்த இரண்டு எலக்ட்ரிக் பைக்குகளுக்கும் தான் பண்டிகை விலையாக 41,500 வரை (*Conditions Apply) சலுகை விலையை அறிவித்து இருக்கிறது ஹீரோ மோட்டோ கார்ப், நாட்டில் உள்ள எந்த ஹீரோ ஷோரும்களையும் அணுகி, சலுகை விலையோடு உங்கள் விடா எலக்ட்ரிக் பைக்குகளை பெற்றுச் செல்லலாம், அமேசான் மற்றும் ப்ளிப்கார்ட் மூலமாகவும் இந்த ஆபர்களை ஹீரோ வழங்கி வருகின்றன "