Zoho VS Freshworks - தென் இந்தியாவின் முன்னனி தொழில்நுட்ப நிறுவனங்களாக் வளர்ந்து வரும் Zoho, Freshworks க்கும் இடையில் அப்படி என்ன தான் பிரச்சினை என்பது குறித்து பார்க்கலாம்.
Zoho VS Freshworks - பொதுவாக தற்போது தென் இந்தியாவில் தற்போது வேகமாக வளர்ந்து வரும் இரண்டு தொழில் நுட்ப நிறுவனங்கள் எதுவென்று என கேட்டால் Zoho,Freshworks என நேரடியாக சொல்லி விடலாம், ஆனால் இந்த இரண்டு நிறுவனங்களுக்கு இடையில் கடந்த 2020 முதலே ஒரு பனிப்போர் அமைதியா நடந்து கொண்டு இருக்கிறது, அது என்ன அந்த பனிப்போர் என்பது குறித்து முதலில் பார்க்கலாம்.
முதலில் இந்த பனிப்போர் குறிந்து அறிந்து கொள்ள நாம் 2001 க்கு செல்ல வேண்டும், Freshworks யின் தற்போதைய நிறுவனர் ஒரு காலத்தில் அதாவது 2001 வரை ஆரம்ப கால Zoho வில் ஒரு முக்கிய இடத்தில் பணியாற்றியவர், ஆனால் 2001 யில் Zoho வில் இருந்து விலகி Freshworks நிறுவனத்தை துவங்கினார், இன்று தமிழகத்தில் அந்த நிறுவனம் Zoho விற்கு போட்டியாக வளர்ந்து நிற்கிறது.
இந்த நிலையில் தான் Zoho நிறுவனம் Freshworks மீது ஒரு கடுமையான குற்றச்சாட்டை முன்மொழிந்தது, அதாவது Freshworks நிறுவனம் Zoho வின் ஒரு சில முக்கிய கான்பிடன்சியல் இன்பார்மேசனை எல்லாம் திருடி அதை தனியாக ஒரு தொழிலாக செய்து வருகிறது என்பது குற்றச்சாட்டு, இது குறித்து தனியாக ஒரு வழக்கும் அமெரிக்காவிலும் இந்தியாவிலும் நடந்து வருகிறது.
இருவரும் வேறு வேறு தயாரிப்புகளை நோகி சென்றாலும் கூட Zoho வின் ஒரு சில ஐடியாக்களை மாத்ரூபூதம் களவாடி அவரது Freshworks க்காக பய்ன்படுத்தி வருகிறார் என்பது தான் Zoho வின் குற்றச்சாட்டு, இது குறித்து முழுமையான விவரங்கள் ஏதும் தெரியவில்லை, வழக்கு முடிவுக்கு வரும் பட்சத்தில் யார் பக்கம் சரியான நியாயம் இருக்கிறது என்பது தெரிய வரும்.