Tuticorin Airport Upgradation Current Status - தூத்துக்குடி ஏர்போர்ட் விரிவாக்க பணிகள் வெகு விரைவாக நடைபெற்று வரும் நிலையில், தூத்துக்குடி ஏர்போர்ட்டிற்கு சர்வதேச அந்தஸ்து கிடைக்குமா என்ற கேள்வி எழுந்து இருக்கிறது.
Tuticorin Airport Upgradation Current Status - தமிழகத்தில் சென்னைக்கு அடுத்து நான்கு வித போக்குவரத்துகளையும் (சாலை, ரயில், வானம், கடல் வழி) கையாளும் ஒரே மாவட்டம் தூத்துக்குடி என்பது அனைவரும் அறிந்ததே. தற்போது தூத்துக்குடியில் இருக்கும் உள்நாட்டு விமான நிலையத்தின் விரிவாக்க பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. கிட்டதட்ட 381 கோடி செலவில் நடைபெற்று வரும் பணிகளில் பல முக்கிய அப்டேசன் நடைபெற்றுக் கொண்டு இருக்கிறது.
தற்போது சென்னை, பெங்களுருக்கு செல்லும் 6 விமானங்களை மட்டுமே தூத்துக்குடி விமான நிலையம் கையாண்டு வருகிறது, இண்டிகோ விமானங்களுக்கு ஏற்றவாறு மட்டுமே ரன்வே அமைக்கப்பட்டு இருக்கிறது. கிட்ட தட்ட பீக் ஹவரில் சராசரியாக 170 பயணிகள், வருடத்திற்கு சராசரியாக மூன்று இலட்சம் பயணிகளை கையாண்டு கொண்டு இருக்கிறது தூத்துக்குடி விமான நிலையம்.
தற்போது ரன்வே 1,315 மீட்டரில் இருந்து 3,115 மீட்டர் நீளமாக நீட்டப்பட்டு இருக்கிறது, இதன் மூலம் ஏர்பஸ் வகை விமானங்களை கையாள முடியும், 17,500 சதுர மீட்டரில் உருவாக்கப்படும் புதிய டெர்மினல் மூலம், பீக் ஹவரில் 1,500 பயணிகளையும், வருடத்திற்கு 2 மில்லியன் பயணிகளை கையாள முடியும். இது போக டெக்னிக்கல் பிளாக், ஏர் டிராபிக் டவர், அட்வான்ஸ்டு சிஸ்டம்ஸ் உள்ளிட்டவைகளும் தூத்துக்குடி விமான நிலையத்தில் வர இருக்கின்றன.
வெகு விரைவாக நடைபெற்று வரும் பணிகள் ஒட்டு மொத்தமாக டிசம்பரில் முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது, ஏற்கனவே தூத்துக்குடியில், கடல் வழி, தரை வழி போக்குவரத்துக்கள் வலுவாக உள்ளன, அந்த வகையில் வான்வெளி போக்குவரத்தும் வலுவாகும் போது, அது அங்கிருக்கும் தொழிற்சாலைகளுக்கும், திருநெல்வேலி, தூத்துக்குடியை சுற்றி இருக்கும் மக்களுக்கும் பெரிதும் பயனுள்ளதாக அமையும்.
ஆனாலும் தூத்துக்குடி விமான நிலையத்திற்கு சர்வதேச அந்தஸ்து என்பது கிடைப்பது சந்தேகம் தான் என கூறப்படுகிறது, அதற்கு இன்னும் கூட வருடங்கள் ஆகலாம். ஆனாலும் தமிழகத்தில் சென்னை சர்வதேச விமான நிலையத்திற்கு அப்புறம், மிகப்பெரிய இரண்டாவது விமான நிலையமாக உருவெடுக்க இருக்கிறது தூத்துக்குடி விமான நிலையம்.
" தூத்துக்குடி விமான நிலையம் அதிகப்படியான பயணிகளை கையாளும் போது, தூத்துக்குடி மாநகரின் சுற்றுலாத்துறை விரிவடைய வாய்ப்பு இருக்கிறது, வணிக ரீதியான ஏற்றுமதி இறக்குமதியும் அதிகமாகும், தொழிற்சாலைகள் பெருக வாய்ப்பு இருக்கிறது, ஒரு சில முக்கிய இந்திய நிறுவனங்கள் தூத்துக்குடியில் நிறுவனங்கள் அமைக்கவும் வாய்ப்பாக இது அமையும் "