IT வேலையே வேண்டாம்..!!மாட்டு பண்ணை தொடங்கிய கணவன்-மனைவி..!2 கோடி வருமானம், 300 பேருக்கு வேலை!

Dairy Business In Tamil -ஐடி துறையை விட்டு அகமதாபாத்தைச் சேர்ந்த ஸ்ரீகாந்த் மற்றும் சார்மி மால்டே தம்பதி, 2017-ஆம் ஆண்டு கவ்நீதி ஆர்கானிக் பிரைவேட் லிமிடெட் என்ற மாட்டு பண்ணை நிறுவனம் தொடங்கி, தற்போது 2 கோடி ரூபாய் வருமானம் ஈட்டியுள்ளனர்.
Dairy Business In Tamil  | Village Business Ideas In Tamil

Dairy Business In Tamil -இந்தியாவில் மக்களுக்கு என்ன என்ன  தேவைகள் இயக்கிறது என்று அறிந்து தொடங்கப்படும் ஸ்டார்ட்-அப் நிறுவனங்கள் சிறந்த வளர்ச்சியை அடைகின்றன.பலரும் தொழில் துவங்கி நல்ல நிலையில் இருந்து வருகின்றார்கள். அவர்களை போன்றே அகமதாபாத்தைச் சேர்ந்த ஸ்ரீகாந்த் மால்டே மற்றும் அவரது மனைவி சார்மி மால்டே 2017ஆம் ஆண்டு தொடங்கிய கவ்நீதி ஆர்கானிக் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தை துவங்கி இருக்கிறார்கள்.

கணவன்,மனைவி இருவரும் ஐடி துறையில் 10 ஆண்டுகள் வேலை செய்தபின், 2014ஆம் ஆண்டு ஸ்ரீகாந்தின் தந்தை புற்றுநோயால் இறந்ததை தொடர்ந்து, வாழ்க்கை முறை மற்றும் உணவுப் பழக்கங்களில் மாற்றம் செய்ய வேண்டிய அவசியத்தை உணர்ந்தனர். இதனால், அவர்கள் இயற்கையாக உற்பத்தி செய்யப்பட்ட பொருட்களை மட்டுமே பயன்படுத்தத் தொடங்கினார்கள்.இது தான் அவர்களை ஐடி வேலையை விட்டு, பால் பொருட்கள் தயாரிப்பில் முழுமையாக ஈடுபட ஊக்குவித்தது.


மேலும்,2017ஆம் ஆண்டு, கவ்நீதி ஆர்கானிக் நிறுவனத்தை தொடங்கி, உள்ளூர் விவசாயிகள் மற்றும் பால் உற்பத்தியாளர்களிடம் இருந்து பயிற்சி பெற்றனர். அதன் பிறகு, முதலில் நான்கு மாடுகளைப் பராமரித்து, இயற்கையான தீவனத்துடன் பால் உற்பத்தி செய்துவந்தனர்.பால் மற்றும் நெய் போன்ற பொருட்களை அவர்களின் நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கு வழங்கினர்.மேலும், அவர்களின் நல்ல மதிப்பீடுகளைப் பெற்றபின், இதை பெரிய தொழிலாக மாற்ற முடிவு செய்தனர்.


இந்நிலையில், கவ்நீதி நிறுவனம் உயர்தர பால் பொருட்கள், பன்னீர், நெய், நெய் பிஸ்கட், மற்றும் மாட்டு சாணத்தில் இருந்து தயாரிக்கப்படும் ஊதுபத்தி போன்றவற்றை விற்பனை செய்து வருகிறது. "முந்தைய ஐடி வேலையை போல் கிடையாது, இது 365 நாட்களும் தொடரும் வேலை" என்று ஸ்ரீகாந்த் கூறுகிறார். தீபாவளி, புத்தாண்டு ஆகியவற்றில் கூட, மாடுகளுக்கு தீவனம் வைக்கவும், பால் கறக்கவும், பால் பொருட்களை தயாரிக்கவும் வேண்டியிருக்கும்.

தற்போது, கவ்நீதி நிறுவனம் 100 மாடுகளுடன் செயல்பட்டு வருகிறது. அது மட்டுமல்லாமல் அமேசான் போன்ற தளங்கள் வாயிலாகவும் பொருட்களை விற்பனை செய்து வருகிறது.எனவே, 2024 ஆம் நிதி ஆண்டில், இவர்களது நிறுவனம் 2 கோடி ரூபாய் வருவாய்  பெற்றுள்ளது.மேலும், 300 பேருக்கு வேலை வாய்ப்பையும் வழங்கியுள்ளது.மேலும், விவசாயிகளின் குழந்தைகளின் கல்விக்காகவும், இவர்கள் நிதி உதவிகளை வழங்கி வருகிறார்கள்.

அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2