கோவையில் ராணுவ தொழில் பூங்கா...சுற்றுச் சூழல் துறை அனுமதி...தீவிரமெடுக்கும் பணிகள்...!

Covai Defence Manufacturing Hub - தமிழக சுற்றுச்சூழல் பாதுகாப்பு அமைப்பின் அனுமதி கிடைத்து விட்டதால் கோவையில் ராணுவ தொழில் பூங்கா அமைக்கும் பணி தற்போது தீவிரம் எடுத்து இருக்கிறது.
Covai Defence Manufacturing Hub

Covai Defence Manufacturing Hub - தொழில்துறையின்  மையமாக அறியப்படும் கோவையில், இந்தியாவின் பாதுகாப்பு அமைச்சகத்தின் கீழ் செயல்படும், ராணுவ தொழில் பூங்கா ஒன்றும், வெகு விரைவில் அமைய இருப்பதாக தகவல் ஒன்று வெளியாகி இருக்கிறது. கிட்ட தட்ட 420 ஏக்கரில் அமைய இருக்கும் இந்த பூங்காவினால், கோவையில் இன்னும் மிகப்பெரிய அளவில் தொழில்துறையில் மாற்றம் நிகழும் என கூறப்படுகிறது.


தமிழ் நாடு அரசு, மத்திய பாதுகாப்பு அமைச்சகம் மற்றும் தொழில் வளர்ச்சி கழகம் ஆகியவற்றின் மேற்பாற்வையில் அமைந்து கொண்டு இருக்கும் இந்த பணிகளுக்கு சுற்றுச் சூழல் அமைப்பின் அனுமதியும் கிடைத்து விட்டதால் இத்துனை நாட்களாக மெது மெதுவாக நகர்ந்து கொண்டு இருந்த பணிகள் தற்போது தீவிரம் எடுக்க துவங்கி இருக்கின்றன, கிட்ட தட்ட 7 கோவை கிராமங்களை இந்த பூங்கா கவர் செய்வதால் இந்த கிராமங்களும் இந்த தொழிற்சாலையால் பெரிதும் பயனடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 சரி என்ன என்ன இந்த ராணுவ தொழில் பூங்காவில் தயாரிக்கப்படும்?

ஹெலிகாப்டர்கள், ராணுவ விமானங்கள், ஆயுதங்களுக்கான உதிரி பாகங்கள், ஹெலிகாப்டர் உதிரி பாகங்கள், விமான உதிரி பாகங்கள், போர்ப்படை கருவிகள் உள்ளிட்டவைகள், அமைய இருக்கும் கோவை ராணுவ தளவாட பூங்காவில் தயாரிக்கப்பட்டு இந்திய பாதுகாப்பு துறைகளான விமானப்படை, கப்பல் படை, ராணுவ படைகளிடம் சமர்ப்பிக்கப்பட இருக்கிறதாம், இதனால் தமிழகமும் பாதுகாப்பு தளவாட உற்பத்தியில் ஒரு குறிப்பிடத்தக்க வளர்ச்சி அடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.


சரி, இதனால் கோவை மக்களுக்கு என்ன பயன்?

 கிராமங்கள் வளர்ச்சியடையும், நலிவடைந்த கோவையின் ஒரு சில தொழில்துறைகள் புத்துணர்வு பெறும், கிட்ட தட்ட 10,000 பேருக்கு ராணுவ பூங்காவில் பணி புரிய வேலை கிடைக்கும், கிராமங்களில் இருக்கும் நிலத்தின் மதிப்பு கணிசமாக உயரும், ஏற்கனவே தொழில்களின் மையமாக அமைந்து இருக்கும் கோவைக்கு இந்த ராணுவ பூங்கா இரு க்ரீடமாக இருக்கும், முடங்கி கிடைக்கும் இரும்பு தொழில் சம்பந்தப்பட்ட பல தொழில் அமைப்புகள் மீண்டும் கோவையில் மீளும் வாய்புகள் இருக்கிறது.

 சூலுரில் அமைய இருக்கும் இந்த ராணுவ பூங்காவினால், பல வெளி நாட்டு முதலீடுகள் கோவைக்கு வருவதற்கு வாய்ப்புகள் இருக்கிறது, இந்த முதலீட்டினால் கோவை தொழில் நிறுவனங்கள் சர்வதேச அளவில் தங்களது படைப்பை கொண்டு செல்ல  அது வாய்ப்பாக அமையும்