5 Star Hotels Running Out Of Chefs - தேசத்தில் இருக்கும் பிரபல 5 ஸ்டார் ஹோட்டல்களில் எல்லாம் தற்போது சமையல் வல்லுநர்களுக்கு பஞ்சம் ஏற்பட்டு இருப்பதாக ஒரு தகவல் வெளியாகி இருக்கிறது, இதனால் பல 5 ஸ்டார் ஹோட்டல்களும் தங்களது ரெசிடன்ஸ்சியில் தங்கும் வாடிக்கையாளர்களுக்கும், பிரபலங்களுக்கும் வெளியில் இருந்து உணவு ஆர்டர் செய்யும் நிலை ஏற்பட்டு இருக்கிறதாம்,
பொதுவாக 5 ஸ்டார் ஹோட்டல்கள் அனைத்திலும் அங்கு தங்கும் வாடிக்கையாளர்களுக்கு அவர்களின் தேவைக்கு ஏற்ப செய்து கொடுக்க சமையல் வல்லுநர்களை நியமித்து இருப்பார்கள், அந்த சமையல் வல்லுநர்கள் உள்ளூர் சமையலில் இருந்து, உலக சமையல் வரையிலும் கற்று தேர்ந்தவர்களாக இருப்பார்கள், இதனால் வெளிநாட்டு பயணிகளும் அவர்களுக்கு ஏற்ற உணவிற்காகவே 5 ஸ்டார் ஹோட்டல்களில் ரூம் எடுப்பார்கள்.
ஆனால் தற்போது பெரிய பெரிய சர்வதேச ஹோட்டல்களும் கூட சமையல் வல்லுநர்கள் இல்லாமல் தங்களது வாடிக்கையாளர்களின் தேவையை பூர்த்தி செய்ய முடியாமல் திணறி வருகின்றனர், இன்னும் சில 5 ஸ்டார் ஹோட்டல்கள் வெளியில் இருக்கும் ஒரு சில சர்வதேச ஹோட்டல்களுடன் டை அப் வைத்துக் கொண்டு வாடிக்கையாளர்களுக்கு தேவையான உணவை அவர்களிடம் ஆர்டர் பெற்று வருகின்றன.
இதற்கு என்ன காரணம் என்று உற்று நோக்கும் போது சர்வதேச ஹோட்டல்களில் பணிபுரியும் பல சமையல் வல்லுநர்களும் ஹோட்டலில் இருந்து வெளியேறி தனியாக ரெஸ்டாரண்ட் வைத்துக் கொண்டு இருக்கிறார்களாம், ஒரு சிலர் இந்தியாவிலும் இன்னும் சிலர் பிற நாடுகளுக்கு குடியேறி அங்கு போய் ஹோட்டல்களை திறக்கிறார்களாம், இது தான் 5 ஸ்டார் ஹோட்டல்களில் சமீப கால செஃப் பஞ்சத்திற்கு காரணமாக கூறப்படுகிறது.