Boston Dynamics LayOffs - அமெரிக்காவின் வால்தம் நகரை மையமாக கொண்டு செயல்பட்டு வரும் Boston Dynamics நிறுவனம் கிட்ட தட்ட 32 வருடங்களாக ரோபோட்டிக்ஸ் தயாரிப்பு மற்றும் ஆராய்ச்சியில் ஈடுபட்டு வருகிறது, இவர்களது Dog ரோபோட் அன்று சந்தைகளில் மிக பிரபலம், கிட்டதட்ட 500 ஊழியர்களை கொண்டு இயங்கி வரும் Boston Dynamics நிறுவனம் ரோபோட்டிக்ஸ், AI, தானியங்கிகள் உள்ளிட்ட தயாரிப்பில் ஈடுபட்டு வருகிறது.
இத்தகைய Boston Dynamics நிறுவனத்தில் சமீப காலமாகவே நிலையான வருமானங்களும் இலாபங்களும் இல்லை, சந்தைகளில் இயங்கி வரும் அட்வான்ஸ்டு டெக்ன்லாஜிகளால் ரோபோட்டிக்ஸ் துறையில் பெரிதாக முன்னேற்றம் இல்லை, செயற்கை நுண்ணறிவு கண்டு பிடிப்புகள் உலகில் விஞ்சி நிற்பதால், தினம் தினம் புது புது கண்டு பிடிப்புகள் வந்த வண்ணம் இருந்து கொண்டு இருக்கின்றன.
அது போக தற்போதெல்லாம் நிறுவனங்கள் தங்களுக்கு தேவையான ஆட்டோமேசன்களை நிறுவனங்களே தயாரித்துக் கொள்வதால், Automation துறையும் பெரும் பின்னடைவை சந்தித்து வருகிறது, இத்தகைய சூழல்களால் Boston Dynamics நிறுவனம் களப்போட்டியில் நிற்க முடியாமல் திணறி வருகிறது, இனி வரும் ஆண்டுகளில் நிறுவனத்தை சமநிலையை நோக்கி எடுத்துச் செல்ல நிறுவனம் முடிவெடுத்து இருக்கிறது.
அதன் முதற்கட்டமாக நிறுவனத்தின் ஒட்டு மொத்த ஊழியர்களுள் கிட்டதட்ட 5% ஊழியர்களை வேலையை விட்டு நீக்க நிறுவனம் முடிவு செய்து இருக்கிறது, இது ஒரு கடினமான சூழல் தான் என்றாலும் கூட நிறுவனத்தின் எதிர்கால இலக்குகளுக்காகவும், நிறுவனத்தின் சமநிலையான வருமானத்திற்காகவும் இத்தகைய நீக்கத்தை கட்டாயப்படுத்துவது அவசியமாகிறது என Boston Dynamics தலைமைகள் கூறி இருக்கின்றன.