• India
```

இருக்கின்ற ஊழியர்களே போதும்...இனி ஊழியர்கள் வேண்டாம்...டெக் நிறுவனங்கள் திட்டவட்டம்...!

Worldwide Tech Hiring Falls Up To 26 Percentage

By Ramesh

Published on:  2024-11-28 21:51:39  |    165

Worldwide Tech Hiring Falls Up To 26% - உலகளாவிய அளவில் டெக் நிறுவனத்தின் Recruitment என்பது வெகுவாக சரிந்து இருக்கிறது, அது குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

Worldwide Tech Hiring Falls Up To 26% - இந்த வருடத்தின் இரண்டாவது பாதியில் மட்டும் உலகளாவிய அளவில் கிட்டதட்ட ஒரு இலட்சம் டெக் ஊழியர்கள் வேலை இழப்பை சந்தித்து இருக்கின்றனர், பெரும்பாலும் இந்த ஊழியர்கள் வேலை இழப்பை சந்திக்க காரணம், நிறுவனத்தின் சுயநலமாகவே பார்க்கப்படுகிறது, இலாப நோக்கம், வருமான இழப்பு, நிறுவன சமநிலை உள்ளிட்ட நிறுவன காரணங்களுக்காகவே இந்த வேலை இழப்பு ஏற்படுகிறது.

மற்றபடி ஊழியர்களின் திறன் குறைவு, ஆற்றல் குறைவு, வயது முதிர்வு உள்ளிட்ட காரணங்கள் வைத்து வேலை இழப்பு செய்வதெல்லாம் வெறும் 10 சதவிகிதம் தான் என கூறப்படுகிறது, பொதுவாக இந்த டெக் நிறுவனங்களின் வேலை இழப்பும், வேலைக்கு சேர்க்கும் திறனும் எந்த புள்ளியில் குறைந்தது என்று யோசித்தால் கோவிட் முழுவதும் முடிந்த போது தான்.



உலகமே முடங்கி கிடந்த கோவிட் சமயங்களில் இயங்கி பல பில்லியன் டாலர்கள் இலாபம் பார்த்த இரண்டு துறைகள் ஒன்று மருத்துவத்துறை என்றால் இன்னொன்று டெக் துறை, அந்த சமயங்களில் டெக் நிறுவனங்களுக்கு டிமாண்ட் அதிகமாக இருந்தது, அதனால் ஒவ்வொரு நிறுவனங்களும் போட்டி போட்டுக் கொண்டு தங்களது நிறுவனங்களுக்கு ஆள் எடுத்தன.

அந்த சமயத்தில் டெக் ஊழியர்களும் பெருகினர், அதே சமயத்தில் நிறுவனத்தின் வருமானமும் பன் மடங்கு பெருகிறது, தற்போது டிமாண்ட் குறைந்து இருக்கிறது, ஊழியர்கள் அதிகமாக இருக்கின்றனர், வருமானம் நிலையாக இல்லை, இது தான் உலகளாவிய அளவில் டெக் நிறுவனத்தின் ஆள் எடுக்கும் திறன் 26% குறைந்து இருப்பதற்கு காரணம் ஆக கூறப்படுகிறது.

" ஒவ்வொரு டெக் நிறுவனங்களும் தற்போது இருக்கின்ற ஊழியர்களே போதும், இனி ஆட்களே எடுக்க மாட்டோம் என்ற நிலைக்கு வந்து விட்டதாக தெரிகிறது "