Vistara Has Officially Merged With Air India - விஸ்தாரா நிறுவனம் டாடாவின் ஏர் இந்தியா நிறுவனத்துடன் இணைய இருக்கும் நிலையில் இன்று விஸ்தாரா நிறுவனத்தின் கடைசி விமானங்கள் பறக்க போகும் நாளாக பார்க்கப்படுகிறது.
Vistara Has Officially Merged With Air India - புது டெல்லியில் உள்ள இந்திராகாந்தி பன்னாட்டு வானூர்தி நிலையத்தை மையமாக கொண்டு இயங்கி வருகிறது விஸ்தாரா நிறுவனம், டாடா மற்றும் சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் என்ற இரு நிறுவனங்களின் கூட்டு முயற்சியால் துவங்கப்பட்டது தான் இந்த விஸ்தாரா, கடந்த 2014 முதல் இயங்கி வரும் விஸ்தாரா நிறுவனம் பயணிகளுக்கு எந்த அசவுகரியங்களையும் கொடுக்காமல் ஒரு தனி பிராண்ட் ஆக செயல்பட்டு வந்தது.
ஆனால் தற்போது ஏர் இந்தியா நிறுவனத்துடன் இணைந்து தங்களது தனி பிராண்ட் அந்தஸ்தை இழக்க இருக்கிறது விஸ்தாரா, இந்த இணைப்பில் மூலம் இந்தியாவில் இருக்கும் முழு சேவை கேரியர்களின் எண்ணிக்கை ஐந்தில் இருந்து ஒன்றாக குறையும், இந்த இணைப்பின் மூலம் டாடா நிறுவனத்திற்கு சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் 25,000 கோடி வழங்க இருப்பதாகவும் தகவல்.
45 விமானங்கள் மூலம் 34 இடங்களுக்கு வானூர்தி சேவையை வழங்கி வந்த விஸ்தாரா நிறுவனம் வாடிக்கையாளர்களிடம் சிறந்த சேவைகளின் மூலம் ஒரு நல்ல நெருக்கமான தொடர்பை கொண்டு இருந்தது. இன்று அதாவது நவம்பர் 11,2024 விஸ்தாரா என்னும் பிராண்டின் கடைசி விமானம் இயக்கப்பட இருப்பதால் பயனர்கள் பலரும் சமூக வலைதளங்களில் விஸ்தாரா குறித்து நெகிழ்ச்சியான கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.
விஸ்தாராவில் செயல்பட்டு வந்த அதிகாரிகள் அனைவருக்கும் இணைப்பிற்கு பின்னர் புதிய பொறுப்பு வழங்கப்படும் என ஏர் இந்தியா அறிவித்து இருக்கிறது, விஸ்தாரா நிறுவனத்தின் இதர பணியாளர்களும் அப்படியே ஏர் இந்தியா நிறுவனத்திற்கு மாற்றப்படுவர், ஏர் இந்தியா குழுமமும் நிர்வாகத்தில் பல மாற்றங்களை அறிவித்து இருக்கிறது, புதிய செயல்பாடுகள் இணைப்பிற்கு பின்னர் எப்படி இருக்க போகிறது என்பதை பொருத்து இருந்து பார்க்கலாம்.