Uber Launches Moto Women - நாட்டிலேயே முதன் முறையாக கர்நாடகா மாநிலம் பெங்களுருவில் Uber நிறுவனம், மகளிர் பைக் டாக்ஸி ரைடர்களை அறிமுகப்படுத்தி இருக்கிறது, ஐக்கிய அமெரிக்காவின் சான்பிரான்ஸிஸ்கோவை மையமாக கொண்டு சர்வதேச அளவில் செயல்பட்டு வருகிறது Uber என்னும் தானுந்து பகிர்வு நிறுவனம், கடந்த 2009 முதல் செயல்பட்டு வரும் Uber நிறுவனம் 70 நாடுகளில் 10,500 வழித்தடங்களை இணைக்கிறது.
சர்வதேச அளவில் 30,400 ஊழியர்களை கொண்டு செயல்பட்டு வரும் Uber நிறுவனம் டாக்ஸி, உணவு டெலிவரி, பார்சல்கள் டெலிவர் உள்ளிட்ட சேவைகளை வழங்கி வருகிறது, வருடத்திற்கு கிட்டதட்ட 38 பில்லியன் அமெரிக்க டாலர்கள் வருமானம் ஈட்டி வரும் Uber நிறுவனத்தின் ஒட்டு மொத்த சொத்து மதிப்பு கிட்டதட்ட 40 பில்லியன் டாலர்களாக இருப்பதாக தகவல்.
2009 லேயே Uber தோன்றி இருந்தாலும் கூட இந்தியாவில் கால் பதித்தது என்பது 2013 யில் தான், ஆரம்பித்த கொஞ்ச நாட்களிலேயே அசுர வளர்ச்சியைக் கண்டது, கடந்த நிதி ஆண்டில் மட்டும் Uber நிறுவனத்தின் வருமானம் என்பது கிட்டதட்ட 54% அதிகரித்து 2,666 கோடியாக இருப்பதாக தகவல், கிட்டதட்ட இந்தியாவில் டாக்ஸிகள் மூலம் அதிக வருமானம் ஈட்டி வரும் Ola நிறுவனத்தை Uber நெருங்கி விட்டது என்றே சொல்லலாம்.
இந்த நிலையில் Rapido போன்ற பைக் டாக்ஸிகளுக்கு இணையாக, Uber நிறுவனமும் தற்போது பைக் டாக்ஸிகளை அறிமுகப்படுத்தி இருக்கிறது, அதுவும் பெண்கள் பைக் டாக்ஸிகளில் பயணிப்பதற்கு ஏதுவாக மகளிர் ரைடர்களையும் Uber வரவேற்று இருக்கிறது, முதற்கட்டமாக பெங்களுருவில் இந்த திட்டம் Uber நிறுவனத்தால் செயல்படுத்தப்பட்டு இருக்கிறது,
" பெண் பைக் டாக்ஸி ஓட்டுநர்கள், பெண் பயணிகளை தான் ஏற்ற வேண்டும் என்பது இல்லை, அவர் விருப்பப்பட்டால் ஆண் பயணிகளையும் ஏற்றிக் கொள்ளலாம் என Uber அறிவித்து இருக்கிறது "