• India
```

Tesla VS Toyota | இரண்டு நிறுவனங்களில் எது டாப்...இரண்டு நிறுவனங்களுக்கு என்ன ஒற்றுமை...என்ன வேற்றுமை பார்க்கலாம் வாங்க...!

Toyota vs Tesla A Comparison of Innovation and Sustainability

By Ramesh

Published on:  2025-02-24 19:14:33  |    400

Toyota vs Tesla: A Comparison of Innovation and Sustainability - மோட்டார் வாகன உற்பத்தியில் சர்வதேச போட்டியாளர்களாக தொடர்ந்து வரும் Tesla மற்றும் Toyoto குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

ஜப்பானை மையமாக கொண்டு சர்வதேச அளவில் செயல்பட்டு வரும் Toyoto நிறுவனம் உலகின் முன்னனி கார் தயாரிப்பு நிறுவனம் ஆக செயல்பட்டு வருகிறது, அதே சமயத்தில் அமெரிக்காவை மையமாக கொண்டு செயல்பட்டு வரும் டெஸ்லா நிறுவனமும், எலான் மஸ்க் தலைமையில் மின்சார வாகன தயாரிப்பில் முன்னனி நிறுவனமாக செயல்பட்டு வருகிறது.

டெஸ்லா நிறுவனம் முழுக்க முழுக்க மின்சார வாகனங்களின் மீதும் ஆட்டோமேட்டடு வாகனங்களின் மீதும் தன் கவனத்தை செலுத்துகிறது, அதே சமயத்தில் Toyoto நிறுவனம் ஆனது, பெட்ரோல், ஹைப்ரிட், பிளக்-இன் ஹைப்ரிட் மற்றும் ஹைட்ரஜன் எரிபொருள் செல் உள்ளிட்ட பல வாகனங்களின் தயாரிப்புகளில் அனுபவத்தோடும் நம்பகத் தன்மையோடும் செயல்பட்டு வருகிறது, 



Toyoto வை பொறுத்தமட்டில் வாடிக்கையாளர்களுக்கு அதன் மீது இருக்கும் நம்பகத்தன்மை அதிகம், டெஸ்லாவை பொறுத்தமட்டில் அது என்ன தான் எலான் மஸ்க்கின் கீழ் செயல்பட்டு வரும் முன்னனி நிறுவனம் ஆக இருந்தாலும் கூட வாடிக்கையாளர்களுக்கான நம்பகத்தன்மை என்பது சந்தேகத்திற்கு உரியது தான், டெஸ்லா மென்பொருள், ஓட்டுநர் அம்சங்களில் சிறந்து விளங்குகிறது,

Toyoto பயனர் நட்பு தொழில்நுட்பத்தில் கவனம் செலுத்துகிறது, கடந்த 2024 யில் 1.79 மில்லியன் கார்களை டெஸ்லா விற்று இருக்கிறது, Toyoto கடந்த 2024 யில் 9.5 மில்லியன் கார்களை விற்று இருக்கிறது, ஒரு 10 வருடங்களுக்கு முன்பு அதாவது 2014 யில் Toyoto 10.23 மில்லியன் கார்களை விற்று இருந்தது, இன்றும் அதே அளவிலான மார்க்கெட்டை தொடருவதன் மூலம் Toyoto வின் நம்பகத்தன்மை புலப்படும்.

" EV தொழில்நுட்பம் மற்றும் செயல்திறனை நீங்கள் முன்னுரிமைப்படுத்தினால், டெஸ்லா விருப்பமான தேர்வாக இருக்கலாம், பரந்த அளவிலான தேர்வுகள் மற்றும் மிகவும் பாரம்பரியமான மோட்டார் வாகன அனுபவத்தை நீங்கள் மதிப்பிட்டால் Toyoto சிறந்ததாக தெரியலாம் "