Top Indian Firms By Revenue 2024 - கடந்த நிதி ஆண்டில் அதிக வருமானம் ஈட்டி இருக்கும் டாப் இந்திய தொழில் நிறுவனங்கள் குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
Top Indian Firms By Revenue 2024 - பொதுவாக இந்தியாவில் நிறுவனங்களுக்கு இடையிலான வருவாய் போட்டி என்பது கடந்த சில வருடங்களாக அம்பானி மற்றும் அதானி நிறுவனங்களுக்கு இடையில் தான் நடந்து வருகிறது, இந்த இருவர் தான் இந்த வருவாய் போட்டியில் மாறி மாறி முதல் இரண்டு இடங்களை பிடித்து வருகின்றனர், அந்த வகையில் இந்த வருடமும் கூட அதே சூழல் தான் நிலவி இருக்கிறது.
முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் நிறுவனம் கடந்த நிதி ஆண்டில் மட்டும் $90.46 பில்லியன் வருவாய் ஈட்டி இருப்பதாக தெரிகிறது, அதில் ஆபரேட்டிங் வருவாய் என்பது $12 பில்லியன் டாலர் என கூறப்படுகிறது, அதற்கு அடுத்தபடியாக கவுதம் அதானியின் அதானி குரூப்ஸ் நிறுவனம் கடந்த நிதி ஆண்டுல் மட்டும் $36 பில்லியன் டாலர் வருவாய் ஈட்டி இருப்பதாக கூறப்படுகிறது.
அதற்கு அடுத்தகட்டமாக இப்பட்டியலில் மூன்றாவது இடத்தில் சாவித்ரி ஜிண்டால் அவர்களின் JSW நிறுவனம் இடம் பிடித்து இருக்கின்றது, கடந்த நிதி ஆண்டில் மட்டும் JSW நிறுவனம் $26 பில்லியன் டாலர் வருமானம் ஈட்டி இருப்பதாக கூறப்படுகிறது, அதற்கு அடுத்த கட்டமாக ஷிவ் நாடார் அவர்களின் HCL டெக்னாலஜிஸ் நிறுவனம் இப்பட்டியலில் நான்காம் இடத்தை பிடித்து இருக்கிறது.
கடந்த நிதி ஆண்டில் மட்டும் HCL டெக்னாலஜிஸ் நிறுவனத்தின் வருமானம் 13.8 பில்லியன் டாலராக இருப்பதாக தகவல், உலகளாவிய அளவில் என எடுத்துக் கொண்டால் எலான் மஸ்க் இப்பட்டியலில் முதலிடத்தில் இருக்கிறார், அவர் கடந்த நிதி ஆண்டில் மட்டும், தனது சொத்தில் 218 பில்லியன் அமெரிக்க டாலரை இணைத்து இருப்பதாக தகவல், அவரின் நிகர சொத்து மதிப்பு தற்போது 500 பில்லியன் டாலரை நெருங்குகிறதாம்.