Thyssenkrupp Steel To Eliminate 11,000 Jobs - பிரபல ஜெர்மன் ஸ்டீல் இண்டஸ்ட்ரியாக அறியப்படும் Thyssenkrupp தங்கள் நிறுவனத்தில் இருந்து 11,000 பணியாளர்களை நீக்க முடிவு செய்து இருக்கிறது.
உலகளாவிய அளவில் சீன நிறுவனங்களின் ஆதிக்கம், வரி அதிகரிப்பு, போட்டி நிறுவனங்களின் தலையீடு, ஏற்றுமதி செயலாக்கங்கள் இடையில் கொரோனோ வருடங்கள் இவைகள் தான் Thyssenkrupp நிறுவனத்தின் மிகப்பெரிய வருமானச்சரிவிற்கு காரணமாக கூறப்படுகிறது, நிறுவனத்திற்குள் வருமானச் சமநிலையை கொண்டு வர Thyssenkrupp ஒரு சில கடின முடிவுகளை எடுக்கப் போவதாக அறிவித்து இருக்கிறது.
முதற்கட்டமாக நிறுவனத்தில் இருந்து 5000 ஊழியர்களை பணி நீக்கம் செய்ய இருக்கிறது, பின்னர் தயாரிப்புகளை குறைத்து நிறுவனத்தின் சமநிலையை ஆராய இருக்கிறது, அப்படியும் வருமானச் சமநிலையை நிறுவனம் எட்டவில்லை எனில் மேலும் 6000 ஊழியர்களை Thyssenkrupp வரும் காலங்களில் நீக்க முடிவு எடுத்து இருக்கிறது, இதனால் நிறுவனத்தில் 23% ஊழியர்களை Thyssenkrupp இழக்க நேரிடும் என கூறப்படுகிறது.