Tesla Set to Launch in India - பிரபல டெஸ்லா நிறுவனம் இந்தியாவிற்குள் நுழைவது அதிகாரப்பூர்வ உறுதி செய்யப்பட்டு இருக்கிறது அது குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
டொனால்ட் ட்ரம்ப் அமெரிக்க அதிபராக பதவி ஏற்றதில் இருந்து ஒரு சில அதிரடி நடவடிக்கைகள் எடுத்து வருகிறார், அந்த அதிரடி நடவடிக்கைகளுக்கு ரஷ்யா, வட கொரியா உள்ளிட்ட நாடுகள் பணியாவிட்டாலும் கூட, இந்தியா மொத்தமாக பணிந்து இருக்கிறது, இந்தியா பணிந்ததோடு மட்டும் அல்லாமல் அமெரிக்காவிற்கு ஆதரவான சூழலையும் ஏற்படுத்திக் கொடுத்து வருகிறது.
உதாரணத்திற்கு சொல்ல வேண்டுமானால், ட்ரம்ப் அமெரிக்காவிற்கு அதிகமாக வரி விதிக்கும் அத்துனை நாடுகளுக்கும் 100% வரி விதிக்கபோவதாக அறிவித்து இருந்தார், அதற்கு பணிந்து அமெரிக்காவின் ஒரு சில பொருட்களுக்கு இறக்குமதியை இந்தியா குறைத்தது, பிரிக்ஸ் கூட்டமைப்பு வர்த்தகத்திற்காக டாலரை பயன்படுத்தாமல் புதிய கரன்ஸ்சியை உருவாக்குவோம் என முடிவெடுத்தது.
ஆனால் அதிலும் இந்தியா உடன்படாமல் அமெரிக்காவிற்கு ஆதரவாக செயல்பட்டு டாலரிலே வர்த்தகம் செய்வோம் என திட்டவட்டமாக கூறியது, அமெரிக்க அதிபர் தேர்தலில் ட்ரம்பிற்கு உறுதுணையாக நின்ற எலான் மஸ்க்கிற்கு ஆதரவாகவும் ட்ரம்ப் ஒரு சில நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார், அதாவது அவரது நிறுவனங்களை தங்கு தடையின்றி இருந்தியாவிற்கு புகுத்துவது அவரது முடிவாக இருக்கிறது.
இதனால் ஸ்டார்லிங், டெஸ்லா போன்ற எலான் மஸ்க் நிறுவனங்கள் இந்தியாவிற்குள் நுழைந்து, இந்திய நிறுவனங்களுக்கு பெரும் போட்டியாக மாற வாய்ப்பு இருக்கிறது, இந்தியாவும், மஸ்க் ட்ரம்ப் ஆதரவாளர் என்பதால் டெஸ்லா உள்நுழைய சம்மதமும் தெரிவித்து இருக்கிறது, இதனால் முதற்கட்டமாக மும்பை மற்றும் டெல்லியில் 5000 சதுர அடியில் மிகப்பெரிய டெஸ்லா ஷோரூம் வர இருக்கிறதாம்.
" டெஸ்லா நுழையும் பட்சத்தில் இந்திய எலக்ட்ரிக் கார் நிறுவனங்கள் ஒரு மிகப்பெரிய போட்டியை சந்திக்க நேரிடும், இந்திய நிறுவனங்கள் எப்படி ஒரு அமெரிக்க கார்பரேட்டுக்கு எதிராக நிற்க போகிறது என்பதை பொறுத்து இருந்து பார்க்கலாம் "