• India
```

சர்வதேச அளவில் சரியும் டெஸ்லாவின் விற்பனைகள்...என்ன செய்ய போகிறார் எலான் மஸ்க்...?

Tesla Sales And Shares Down Globally

By Ramesh

Published on:  2025-02-19 10:02:43  |    171

Tesla Sales And Shares Down - பிரபல டெஸ்லா நிறுவனத்தின் விற்பனைகள் உலகளாவிய அளவில் சரிந்து இருப்பதாக ஒரு தகவல் வெளியாகி இருக்கிறது அது குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

அமெரிக்காவை மையமாக கொண்டு செயல்பட்டு வரும் டெஸ்லா நிறுவனம், எலக்ட்ரிக் வாகனங்களை தயாரித்து உலகளாவிய அளவில் சந்தைப்படுத்தி வருகிறது, ப்ரீமியம் எலக்ட்ரிக் கார்களை தரமான விதத்தில் கொடுப்பதால் டெஸ்லா கார்களுக்கு என்று உலகளாவிய அளவில் நல்ல சந்தை மதிப்பு இருக்கிறது, கடந்த வருடத்தில் மட்டும் டெஸ்லா 97.7 பில்லியன் டாலர்கள் வருமானம் ஈட்டி இருக்கிறது.

ஆனாலும் கூட வருமானம் மற்றும் விற்பனையில் சர்வதேச அளவில் சிறு சரிவை டெஸ்லா கண்டு இருப்பதாக தரவுகள் கூறுகின்றன, கடந்த 2024 யில் மட்டும் டெஸ்லா 1.78 மில்லியன் கார்களை தயாரித்து சந்தைப்படுத்தி இருக்கிறதாம், அளவுகள் பெரிதாக தெரிந்தாலும் கூட 2023 யை ஒப்பிடும் போது ஓர் ஒரு சதவிகிதம் விற்பனையில் சரிவு தான் என கூறப்படுகிறது.



1 சதவிகிதம் என்பது சிறியதாக தெரிந்தாலும் கூட மில்லியன் கணக்கில் ஒரு சதவிகிதம் என்னும் போது, அந்த ஒரு சதவிகிதம் என்பதை டெஸ்லா அதை பெரியதாக தான் பார்க்கிறது, அது மட்டும் அல்லாமல் டெஸ்லா 2016 முதல் 2023 வரை விற்பனையிலும் வருமானத்திலும் சிறு சரிவை கூட சந்தித்ததே இல்லை, உலகளாவிய அளவிலான போட்டி இந்த விற்பனை சரிவிற்கு காரணம் என கூறப்படுகிறது.

இந்த சரிவை மீட்க இந்த நிதி ஆண்டில் டெஸ்லா தயாரிப்புகளிலும் நிறுவனங்களிலும் சந்தைகளிலும் ஒரு சில மாற்றங்களை செய்ய இருக்கிறது, அது போக இந்த வருடத்தின் முதல் பாதியில் ஆட்டோமேட்டடு டாக்ஸி ஒன்றையும் டெஸ்லா அறிமுகப்படுத்த இருப்பதால் இந்த அறிமுகம் டெஸ்லாவின் வளர்ச்சி பாதையை நிர்ணயிப்பதாக அமையும் என எதிர்பார்க்கபடுகிறது.