Tesla Recalling It's Model 3 And Model Y Cars - பிரபல டெஸ்லா நிறுவனம் கிட்டத்தட்ட 4 இலட்சம் கார்களை திரும்ப பெறுவதாக அறிவித்து இருக்கிறது, அதற்கான காரணம் என்ன என்பது குறித்து பார்க்கலாம்.
எலக்ட்ரிக் கார்கள் தயாரிப்பில் முன்னனி நிறுவனம் ஆக அறியப்படும் டெஸ்லா நிறுவனம், திடீரென்று 3,76,000 கார்களை வாடிக்கையாளர்களிடம் இருந்து திரும்ப பெறுவதாக அறிவித்து இருக்கிறது, அதற்கான காரணம் என்ன என்று பார்க்கலாம், பொதுவாக 2023 மாடல் 3 மற்றும் மாடல் Y வகை கார்களில் ஒரு சில தொழில்நுட்ப கோளாறுகள் வருவதாக வாடிக்கையாளர்கள் புகார் அளித்து வந்தனர்.
தொடர்ந்து பலரும் கார்களில் அதே பிரச்சினையை எதிர்கொள்ளவே அனைவரும் டெஸ்லா கார்களில் ஏற்படும் பிரச்சினைகள் குறித்து இணையத்தில் விவாதிக்க ஆரம்பித்தனர், இந்த தகவல் எலான் மஸ்க் அவர்களிடம் சென்று சேரவே, எலான் மஸ்க்கும் டெஸ்லா தயாரிப்பு குழுவும் இணைந்து பேசி பிரச்சினைகள் வரும் கார்களை திரும்ப பெறுவதாக அறிவிப்பு விடுத்து இருக்கின்றன.
சரி அப்படி என்ன தான் அந்த கார்களில் பிரச்சினை என்றால் பவர் ஸ்டீயரிங் மற்றும் அது சம்பந்தப்பட்ட போர்டுகளில் ஏற்பட்ட மென்பொருள் கோளாறுகள் தான் வாகனம் இயக்குவதில் சிரமத்தை ஏற்படுத்துவதாக முதற்கட்டமாக டெஸ்லா மென்பொருள் தொழில்நுட்ப விஞ்ஞானிகள் கண்டு பிடித்து இருக்கின்றனர், இது சரி செய்ய கூடியது தான் எனவும் டெஸ்லா அறிவித்து இருக்கிறது.
அவ்வாறாக வாடிக்கையாளர்கள் நேரடியாக டெஸ்லா நிறுவனத்திற்கு வந்து கார்களை விடும் பட்சத்தில் அவர்களுக்கு இலவசமாக மென்பொருள் அப்டேட் செய்து கொடுக்கப்படும் எனவும் நிறுவனம் அறிவித்து இருக்கிறது, முன்னனி கார் நிறுவனத்தின் கார்களில் ஏற்பட்ட பிரச்சினை காரணமாக டெஸ்லா மீதான நம்பிக்கை வாடிக்கையாளர்களிடையே சற்றே சரிந்து இருக்கிறது.