Tech LayOffs Fall Automobile Lay Offs Becomes High - ஓரு பக்கம் தொழில்நுட்ப நிறுவனங்களின் வேலை நீக்கம் குறைகிறது, இன்னொரு பக்கம் ஆட்டோ மொபைல் நிறுவனத்தின் வேலை நீக்கம் அதிகரிக்கிறது, இதற்கு என்ன காரணம் என்று குறித்து பார்க்கலாம்.
Tech LayOffs Fall, Automobile Lay Offs Becomes High - தொடர்ந்து தொழில்நுட்ப நிறுவனங்கள் கடந்த இரண்டு ஆண்டுகளாக பெரிதளவில் வேலை நீக்கத்தை அறிவித்து வருகின்றன, ஆனால் இந்த அக்டோபரில் தொழில் நுட்ப நிறுவனங்களில் வேலை நீக்கம் வெகுவாக குறைந்து இருப்பதாக ஒரு தகவல் வெளியாகி இருக்கிறது, அதே சமயத்தில் உலகளாவிய அளவில் ஆட்டோ மொபைல் நிறுவனங்களின் வேலை நீக்கம் வெகுவாக அதிகரித்து வருகிறது.
நிஸான், ஜெனரல் மோட்டார்ஸ், Ford, ஹீண்டாய் என பல சர்வதேச ஆட்டோ மொபைல் நிறுவனங்கள் தொடர்ந்து வேலை நீக்கத்தை அறிவித்து வருகின்றன, தற்போது ஆட்டோமொபைல் நிறுவனத்தில் நடக்கும், வேலை நீக்கம் என்பது, தற்போது டெக் நிறுவனத்தில் நடக்கும் வேலை நீக்கத்தை விட கிட்டதட்ட 32% அதிகமாகி இருக்கிறது, இது மேலும் அதிகரிக்கும் எனவும் கூறி வருகின்றனர்.
தற்போது இருக்கும் சூழலில் தொழில் நுட்ப நிறுவனங்கள் ஓரளவிற்கு சமநிலையை அடைந்து இருக்கின்றன, ஆனால் ஆட்டோ மொபைல் நிறுவனங்கள் தான் ஆட்டம் கண்டு கொண்டு இருக்கின்றன, பெரும்பாலும் நுகர்வோர்கள் எலக்ட்ரிக் வாகனங்களை நோக்கி சென்று கொண்டு இருப்பதால், நிஸான், ஜெனரல் மோட்டார்ஸ், Ford உள்ளிட்ட நிறுவனங்கள் அந்த போட்டியில் திணறி வருகின்றன.
எலக்ட்ரிக் வாகன தயாரிப்பில் நிலவி வரும் போட்டியால் பெரும்பாலான நிறுவனங்களின், எரிபொருள் வாகன விற்பனைகள் வெகுவாக சரிந்து வருகின்றன, இதனால் பெரும்பாலான ஆட்டோ மொபைல் நிறுவனங்கள் நிகர வாகன தயாரிப்பை குறைத்து வருகின்றன, இதனால் நிறுவனத்தில் ஊழியர்களையும் குறைக்கும் நிர்ப்பந்தம் ஏற்பட்டு இருக்கிறது, இதனால் தான் தற்போது ஆட்டோ மொபைல் நிறுவனங்களில் வேலை இழப்பு அதிகம் இருப்பதாக தகவல்.