• India
```

பூட்டானில் 5000 மெகா வாட் பசுமை ஆற்றல் நிலையத்தை அமைக்க இருக்கும் டாடா பவர்!

Tata Power Plan To Make 5000 MW Green Energy Sources In Bhutan

By Ramesh

Published on:  2024-11-20 04:21:25  |    215

Tata Power Plan To Make 5000 MW Green Energy Sources In Bhutan - பூட்டானின் எரிசக்தி துறை மேம்பாட்டை கருத்தில் கொண்டு, டாடா பவர் நிறுவனம், பூட்டானில் 5000 மெகா வாட் பசுமை ஆற்றல் நிலையத்தை திறக்க இருக்கிறது.

Tata Power Plan To Make 5000 MW Green Energy Sources In Bhutan - தெற்காசியாவில் இமயமலைச் சாரலின் கிழக்கே அமைந்து இருக்கும் ஒரு நிலத்திடை நாடு தான் பூட்டான், அந்த நாட்டின் குறிக்கோள் என்பது 100% பசுமை ஆற்றலை நாட்டிற்குள் உட்புகுத்துவது தான்,  கிட்டதட்ட 30,000 மெகா வாட் பசுமை ஆற்றலை நீர் மின் சக்திகள் மூலம் பூட்டான் பெறுகிறது, இது போக சூரிய மின் சக்தி மூலம் 12,000 மெகா வாட் மின் ஆற்றலை பெறுகிறது, 

பூட்டான் உற்பத்தி செய்திடும் 30,000 மெகா வாட் நீர்மின் ஆற்றலில் 70% இந்தியாவிற்கு தான் அனுப்பப் படுகிறது, ஒட்டு மொத்தமாகவே பூட்டானுக்கு முக்கிய ஆற்றலாக இருப்பது நீர் மின் ஆற்றல் தான், இந்த நிலையில் டாடா பவர் மற்றும் ட்ரக் க்ரீன் பவர் இரண்டும் இணைந்து பூட்டானில் 5000 மெகா வாட் பசுமை ஆற்றல் மையத்தை உருவாக்க புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்து இட்டு இருக்கின்றன.



இது போக டாடா பவர், 2040 க்குள் பூட்டானில் 25,000 மெகா வாட் பசுமை ஆற்றல் உற்பத்தியை இலக்காக கொண்டு இயங்கி வருகிறது, இந்தியா மற்றும் பூட்டான் இரண்டும் இணைந்து, உலகளாவிய அளவில் எரிசக்தி துறையில் ஒரு மிகப்பெரிய மாற்றத்தை எதிர்நோக்கி சென்று கொண்டு இருப்பதாக, டாடா பவர் நிறுவனம் கூறி இருக்கிறது. 

தொடர்ந்து ஜீரோ சதவிகிதம் கார்பன் வெளியீடு, 100 சதவிகிதம் பசுமை ஆற்றல் என்பதை நோக்கி சென்று கொண்டு இருக்கும் பூட்டான் அரசுக்கு, டாடா பவர் நிறுவனத்தின் செயல்பாடுகள் நிச்சயம் உதவிகரமாக இருக்கும், வெகு விரைவில் 100 சதவிகிதம் பசுமை ஆற்றலோடு இயங்கும் முதல் நாடு என்ற பெருமையை பூட்டான் பெறும் என பூட்டான் பிரதமர் டாஷோ ஷெரிங் டோப்கே கூறி இருக்கிறார்.