• India

மாருதியின் 40 வருட சாதனையை...பின்னுக்கு தள்ளி டாடா மோட்டார்ஸ் நிகழ்த்திய புதிய சாதனை...!

TATA Overtaken Maruti

By Ramesh

Published on:  2025-01-06 15:18:21  |    31

TATA Overtaken Maruti - புது டெல்லியை மையமாக கொண்டு செயல்பட்டு வரும் மாருதி சுசுகி இந்தியா கடந்த 40 வருடங்களாக இந்தியாவின் முதன்மையான கார் தயாரிப்பு நிறுவனமாக செயல்பட்டு வருகிறது, சர்வதேச அளவில் கார்களை சந்தைப்படுத்தி வரும் மாருதி சுசுகி நிறுவனத்தின் விற்பனையை 40 வருடங்களாக எந்தவொரு நிறுவனத்தாலும் முறியடிக்க முடியாத நிலையில் டாடா தற்போது தன்னை முன்னிலைப்படுத்தி இருக்கிறது.

பொதுவாக கடந்த வருடம் முதலே மாருதிக்கும் டாடாவிற்கும் இடையில் சரியான போட்டி நிலவி வந்தது, குறிப்பாக சொல்ல வேண்டுமானால் டாடா நிறுவனம் வெளியிட்ட Punch வகை கார்களுக்கும், மாருதி நிறுவனம் வெளியிட்டு இருந்த அப்டேட்டடு Wagon R வகைகளுக்கும் இடையில் தான் அந்த போட்டி என்பது ஆண்டின் துவக்கம் முதலே நிலவியது.



தற்போது வருடத்தின் இறுதியில் அந்த இரண்டு நிறுவனங்களுக்கான போட்டியில் ஒரு முடிவு என்பது வந்து இருக்கிறது, 40 வருடங்களாக விற்பனை சாம்ராஜ்யத்தில் கொடி கட்டி பறந்த மாருதியை, டாடாவின் Punch பின்னுக்கு தள்லி விற்பனையில் புதிய சாதனை படைத்து இருக்கிறது, அதாவது கடந்த 2024 யில் மட்டும் டாடா மோட்டார்ஸின் 2.02 இலட்சம் Punch வகை கார்களை விற்று தீர்த்து இருக்கிறதாம்.

அதே சமயத்தில் மாருதி சுசுகியின் Wagon R வகை கார்கள் 1.90 இலட்சம் கார்களை மட்டுமே கடந்த 2024 யில் சந்தைப்படுத்தி இருக்கிறதாம், இதன் மூலம் மாருதியின் 40 வருட விற்பனை சாதனையை டாடா அதிகாரப்பூர்வமாக முறியடித்து இருக்கிறது, தரம், பாதுகாப்பு, புதிய புதிய தொழில் நுட்பங்கள் என டாடா வாடிக்கையாளர்களின் தேவையை புரிந்து செயல்படுவது இந்த சாதனைக்கு காரணமாக கூறப்படுகிறது.