• India
```

டாடா, உங்களால் ஏர் இந்தியாவை பராமரிக்க முடியாவிட்டால் அரசிடமே கொடுத்து விடுங்கள் - தயாநிதிமாறன்

TATA If You Cannot Give It To Government Says Dhayanidhi Maran

By Ramesh

Published on:  2024-10-19 05:56:01  |    316

TATA If You Cannot Give It To Government - டாடா நிறுவனத்தால் ஏர் இந்தியாவை முழுமையாக பராமரிக்க முடியாவிட்டால் அரசிடமே கொடுத்து விடட்டும் என மத்திய சென்னையின் பாராளுமன்ற உறுப்பினர் தயாநிதிமாறன் கூறி இருக்கிறார்.

TATA If You Cannot Give It To Government - ஏர் இந்தியா தனியார்மயமாக்கும் முன்பு வரை ஒன்றிய அரசின் கீழ் செயல்பட்டு வரும் ஒரு விமான சேவை நிறுவனமாக தான் இருந்து வந்தது, பொதுப்பணித்துறையின் 60,000 கோடி கடனை அடைக்கும் பொருட்டு ஏர் இந்தியாவை டாடா நிறுவனத்திற்கு ஒன்றிய அரசு 18,000 கோடிக்கு தாரை வார்த்தது, டாடா நிறுவனம் நினைத்து இருந்தால் ஏர் இந்தியாவிற்கு புதிய விமானங்களையே இறக்கி இருக்கலாம், ஆனால் தொடர்ந்து பழைய விமானங்களையே சரி வர பராமரிக்காமல் இயக்கி வருவதாக புகார் எழுந்தது.

இந்த நிலையில் தான் சமீபத்தில் திருச்சியில் நடைபெற்ற சம்பவம் அதற்கு சான்றாக அமைந்தது, திருச்சியில் இருந்து ஷார்ஜா சென்ற ஏர் இந்திய விமானம் ஒன்று ஹைட்ராலிக் கோளாறுகளால் அவசரமாக தரையிறக்க வேண்டிய நிலை ஏற்பட்டது, கிட்டதட்ட 2 மணி நேரத்திற்கும் மேலாக வானையே வட்டமிட்டு கொண்டு இருந்த விமானத்தால் தமிழகமே கதிகலங்கியது, 141 பயணிகள் அதில் இருந்ததால் ஒட்டு மொத்த தமிழகத்திலும் அது அச்சத்தை கிளப்பியது.



ஓரு வேளை ஏதாவது தவறு நடைபெற்று இருந்தால் என்ன ஆகி இருக்கும், இது திருச்சியில் மட்டும் அல்ல சமீபத்தில் டெல்லியிலும் இப்படி ஒரு சம்பவம் நடைபெற்றது, அதிலும் பங்கேற்றது ஏர் இந்தியா விமானம் தான், இதனால் ஏர் இந்தியா நிறுவனத்தை தற்போது நடத்தி வரும் டாடா நிறுவனத்தின் மேல் ஒரு நம்பிக்கையில்லா நிலை ஏற்பட்டு இருக்கிறது. பல்வேறு சம்பவங்களுக்கு பின் விமான பராமரிப்பிற்காக தற்போது டாடா 40 கோடியை ஒதுக்கி இருக்கிறது.

இவ்வாறாக நிகழும் பல்வேறு சூழலை சுட்டிக் காட்டி தான், மத்திய சென்னையின் பாராளுமன்ற உறுப்பினர் தயாநிதிமாறன், " டாடா நிறுவனத்தால் ஏர் இந்தியாவை முறையாக பராமரிக்க முடியாவிட்டால், மீண்டும் ஏர் இந்தியாவை ஒன்றிய அரசே எடுத்து நடத்தட்டும், இது குறித்து ஒன்றிய அரசு கலந்து ஆலோசித்து ஒரு சரியான முடிவை பரிசீலிக்கும் என நம்புகிறேன் " என கூறி இருக்கிறார்.