• India
```

948 கோடியை மிஸ் செய்த இந்தியர்..ஸ்டார்பக்ஸ் நிறுவனத்தின் அதிரடி முடிவு..!!

Starbucks Latest News| Who Is The CEO Of Starbucks

Starbucks Latest News-இந்தியாவை சேர்ந்த ஸ்டார்பக்ஸ் நிறுவனத்தின் CEO மாற்றப்பட்டுள்ளார்.மேலும், தற்பொழுது அமெரிக்காவை சேர்ந்த பிரைன் நிக்கோல் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.இவருக்கு தனித்துவமாக ஜெட் வழங்கப்படுகிறது.

Starbucks Latest News-அமெரிக்காவை சார்ந்த பிரைன் நிக்கோல் ஸ்டார்பக்ஸ் நிறுவனத்தின் புதிய தலைமை செயல் அதிகாரியாக பொறுப்பேற்க போகிறார்.50 வயதான நிக்கோலுக்கு ஸ்டார்பக்ஸ் நிறுவனம் பெரும் ஊதியமும் பல்வேறு சலுகைகளையும் வழங்குகிறது.குறிப்பாக, அவர் கலிபோர்னியாவில் உள்ள தனது வீட்டிலிருந்து ரிமோட் சிஸ்டெம் முறையில் வேலை செய்யலாம் மற்றும் அலுவலகம் ரீதியாக சியாட்டிலில் உள்ள தலைமையகத்திற்கு வர வேண்டிய நேரங்களில் அவருக்கு பிரைவேட் ஜெட் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

நிக்கோல், வாரத்திற்கு மூன்று நாட்கள் தலைமையகத்தில் பணி செய்யும்போது, ஸ்டார்பக்ஸ் நிறுவனம் பயண வசதிகளுக்காக ஜெட் ஒன்றை அனுப்ப உள்ளது. ஸ்டார்பக்ஸ் நிறுவனத்தில் தற்போதைய ஹைபிரிட் வேலை நடைமுறையில் இருக்கிறது. பிரைன் நிக்கோலுக்கு ஸ்டார்பக்ஸ் நிறுவனம்  ரூபாய்.948 கோடியை ஊதிய தொகுப்பாக வழங்கியுள்ளது. ஆண்டு ஊதியம், போனஸ் தொகை, ஈக்விட்டி பங்குகள் என அனைத்துமே இதில் அடங்கும். 



நிக்கோலின் வருகைக்கு முன்னால், இந்தியாவைச் சேர்ந்த லட்சுமணன் நரசிம்மன் ஸ்டார்பக்ஸ் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாக இருந்தார். ஆனால், அமெரிக்கா மற்றும் சீனாவில் வருவாய் குறைந்ததால், அவர் அந்த பதவியில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளார்.

பிரைன் நிக்கோல் 2008 ஆம் ஆண்டு சிப்போட்டில் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாக இருந்தபோது, நிக்கோல் நிறுவனத்தின் வருமானத்தை 773% உயர்த்தி இருக்கிறார்.தற்பொழுது, சிக்கலான நிலைமையில் உள்ள ஸ்டார்பக்ஸ் நிறுவனத்தை நிக்கோல் பதவி ஏற்று வழிநடத்தவுள்ளார்.