Siemens LayOffs - பிரபல சைமன்ஸ் நிறுவனத்தின் இலாபம் 46 சதவிகிதம் சரிந்து இருப்பதால், உலகளாவிய அளவில் 5000 பணியாளர்களை வேலையை விட்டு நீக்க முடிவெடுத்து இருக்கிறது.
Siemens LayOffs - 1847 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டு கிட்டதட்ட 177 ஆண்டுகளாக செயல்பட்டு வரும் சைமன்ஸ் நிறுவனம், தொழில்துறை ஆட்டோமேஷன், விநியோகிக்கப்பட்ட எரிசக்தி வளங்கள், ரயில் போக்குவரத்து மற்றும் சுகாதார தொழில்நுட்பம் ஆகிய துறைகளில் கவனம் செலுத்துகிறது, தொழில் துறை ஆட்டோமேஷனுக்கான மென்பொருள் தயாரிப்பில் உலகளாவிய அளவில் சிறந்த நிறுவனம் ஆக அறியப்படுகிறது.
கடந்த நிதி ஆண்டில் மட்டும் கிட்டதட்ட 77.769 பில்லியன் யூரோக்கள் வருமானம் ஈட்டி இருக்கிறது, அதில் நிறுபனத்தின் நிகர இலாபம் மட்டும் தனியாக 8.529 பில்லியன் யூரோக்கள் இருக்கும் என அறியப்படுகிறது, சர்வதேச அளவில் பெரும்பாலான நாடுகளில் இயங்கி வரும் சைமன்ஸ் நிறுவனத்தில் 3,60,000 பணியாளர்கள் பணி புரிந்து வருவதாக தகவல்.
இந்த நிலையில் கடந்த சில மாதங்களாகவே பல நாடுகளில் முக்கிய தொழில் துறைகள் இலாபமின்றி வெகுவாக முடங்கி கிடக்கின்றன, சைமன்ஸ் நிறுவனத்திற்கும் அதே நிலை தான், கடந்த நிதி ஆண்டை விட சைமன்ஸ் நிறுவனத்தின் வருமானத்திலும், இலாபத்திலும் பெரிதான சரிவு இருக்கிறது, கிட்டதட்ட சைமன்ஸ் நிறுவனத்தின் இலாபம் மட்டும் தனியாக 46% சரிந்து இருக்கிறதாம்.
இதனால் ஒரு பத்து நாட்களுக்கு முன்பு சைமன்ஸ் நிறுவனத்தின் தலைமைகள் ஒன்றிணைந்து உலகளாவிய அளவில் சைமன்ஸ் நிறுவனத்தில் பணிபுரியும் ஒரு 5000 பனியாளர்களை நீக்கி நிறுவனத்தை சமநிலைப்படுத்த முடிவு செய்தது, தற்போது அதற்கு ஒப்புதல் கிடைத்து இருக்கிறதாம், முதற்கட்ட பணி நீக்கங்கள் ஜெர்மனியில் அதன் தலைமை அலுவலகத்தில் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.