Samsung Workers Call Off Strike - ஒரு மாதத்திற்கும் மேலாக வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வந்த, சுங்குவார்சத்திரம் சாம்சங் ஊழியர்கள் போராட்டத்தை முற்றிலுமாக கைவிட்டு வேலை நிறுத்தத்தை வாபஸ் வாங்கி இருக்கின்றனர்.
Samsung Workers Call Off Strike - பணி நிரந்தரம், ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வைத்து சுங்குவார்சத்திரம் சாம்சங் ஊழியர்கள் கடந்த செப்டம்பர் 9 ஆம் தேதியில் இருந்து வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வந்தனர். வேலை நிறுத்தம் மட்டும் அல்லாது சாம்சங் தொழிற்சாலையின் பக்கத்திலேயே இந்திய தொழிற் சங்கத்துடன் இணைந்து அமைதியான போராட்டத்திலும் ஈடுபட்டு வந்தனர். கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக நடைபெற்ற இந்த போராட்டத்தின் இடையே இரண்டு முறை பேச்சுவார்த்தை நடைபெற்று பேச்சு வார்த்தை தோல்வியில் முடிந்தது.
இந்த நிலையில் நேற்றைய தினம் தமிழக அரசு மற்றும் சாம்சங் நிறுவனம் இணைந்து, மும்முனை பேச்சுவார்த்தைக்கு சாம்சங் தொழிலாளர்களை அழைத்தது, அதாவது இந்த பேச்சுவார்த்தையில் சாம்சங் தொழிலாளர்கள், சாம்சங் நிறுவனத்தின் முக்கிய ஊழியர்கள், மற்றும் தமிழக அரசு சார்பில் மூவர் என மும்முனையாக பேச்சு வார்த்தையில் ஈடு பட்டனர். இறுதியான சாம்சங் ஊழியர்கள் பேச்சு வார்த்தைக்கு உடன்பட்டு ஒரு சில கோரிக்கைகளுடன் போராட்டத்தை கைவிட்டு வேலைக்கு திரும்புவதாக அறிவித்தனர்.
அதாவது ஊழியர்கள் இத்துனை நாள் போராட்டத்தில் ஈடுபட்டதற்காக நிறுவனம் ஊழியர்களை பழிவாங்கும் நடவடிக்கையில் ஈடுபடக்கூடாது. காவல் துறை மூலம் வேறு ஏதும் நடவடிக்கைகளையும் அரசு எடுக்க கூடாது, இது போக நாங்கள் வைத்த கோரிக்கைகளுக்கும் வெகுவிரைவில் சாம்சங் அறிக்கை மூலம் பதில் தர வேண்டும் என்ற கோரிக்கைகளை எல்லாம் அரசும், சாம்சங் நிறுவனமும் ஏற்றுக் கொண்ட பிறகே ஊழியர்கள் ஸ்ட்ரைக்கை கைவிட்டனர்.
" இன்று முதல் பணிக்கு திரும்ப இருக்கும் சாம்சங் ஊழியர்களுக்கு சரியான ஊதியம் கிடைக்க அரசும், நிறுவனமும் வழிவகை செய்ய வேண்டும் என்றும் பல காலங்களாக சாம்சங் நிறுவனத்தில் பணிபுரிந்து வரும் ஊழியர்களுக்கு நிரந்தர பணிக்கான ஆரடர்களை அவர்களுக்கு கொடுக்க வேண்டும் என்றும் இந்திய தொழிற்சங்க அமைப்பு அரசிடமும் நிறுவனத்திடமும் கோரிக்கை விடுத்து இருக்கிறது "