Samsung vs Apple: A Comprehensive Analysis - எப்போதுமே ஆப்பிள் நிறுவனத்திற்கும் சாம்சங் நிறுவனத்திற்கும் இடையில் ஒரு சர்வதேச அளவிலான போட்டி இருக்கும், அந்த வகையில் இந்த இரண்டு நிறுவனங்களுக்கும் இடையிலான தனித்துவம், பரவல், போட்டி குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
ஆப்பிள் நிறுவனம் அமெரிக்காவை மையமாக கொண்டு உலகளாவிய அளவில் செயல்பட்டு வரும் ஒரு ப்ரீமியம் ஆன பொருள்களை தயாரிக்கும் முன்னனி மின்னனு நிறுவனம், சாம்சங் தென்கொரியாவை மையமாக கொண்டு உலகளாவிய அளவில் செயல்பட்டு வரும் ஒரு முன்னனி மின்னனு நிறுவனம், இந்த இரண்டு நிறுவனங்கள் தான் பல காலமாக சர்வதேச மின்னனு உற்பத்தி போட்டிகளில் களத்தில் நிற்கின்றன.
ஆப்பிள், ஐபோன்கள், ஐபாட்கள், மேக்ஸ்கள் மற்றும் ஆப்பிள் வாட்ச்கள் போன்றவற்றை தடையின்றி ஒன்றிணைத்து செயல்படும் வகையில் தனித்துவமாக தங்கள் தயாரிப்பை தயாரித்து உலகளாவிய அளவில் சந்தைப்படுத்தி வருகின்றன, அதே சமயத்தில் சாம்சங் மற்ற ஆண்ட்ராய்டு சாதனங்கள் மற்றும் பல்வேறு பிராண்டுகளுடன் அதிக இணக்கத்தன்மையை கொண்டு நிற்கிறது.
ஆப்பிளை பொறுத்தமட்டில் ப்ரீமியம் மின்னனு சாதனங்களில் மட்டுமே தன் சந்தைகளை கொண்டு இருக்கிறது, ஆனால் சாம்சங் பட்ஜெட் சாதனங்கள் முதல் ப்ரீமியம் மின்னனு சாதனங்கள் வரை அனைத்து மார்க்கெட்களையும் கையில் வைத்து இருக்கிறது, அது போக சாம்சங் மொபைல், கேட்ஜட்கள் மட்டும் அல்லாமல் வீட்டு உபயோக பொருள்கள் தயாரிப்பிலும் வெற்றிகரமாக ஈடுபட்டு வருகிறது.
சந்தைப்பங்கீட்டை பொறுத்தமட்டில் ஆப்பிளை விட சாம்சங் நிறுவனமே அதிகம் ஆதிக்கம் செலுத்துகிறது, மொபைல் என்னும் மார்க்கெட்டில் மட்டும் சாம்சங்கை விட ஆப்பிள் சற்றே விஞ்சி நிற்கிறது, ஆனால் ஒரு நிறுவனமாக பார்த்தால் சாம்சங்கின் தயாரிப்பும், சாம்சங்கின் பரவலும், சாம்சங்கின் மார்க்கெட்டும் சர்வதேச அளவில், ஆப்பிளை விட விஞ்சியே நிற்கிறது.