Samsung Net profit Doubled In FY24 - பிரபல சாம்சங் நிறுவனத்தின் நிகர இலாபம் நிகழ் நிதி ஆண்டில் கிட்ட தட்ட இரண்டு மடங்கு உயர்ந்து இருப்பதாக தகவல்.
Samsung Net Profit Doubled In FY24 - கிட்டதட்ட 86 ஆண்டுகளுக்கு முன்பு கொரியாவில் துவங்கப்பட்ட சாம்சங் நிறுவனம் தற்போது தென் கொரியாவை தலைமையகமாக கொண்டு உலகளாவிய அளவில் இயங்கி வருகிறது, சர்வதேச அளவில் மிகப்பெரிய மின்னனி உற்பத்தி நிறுவனமாக இயங்கி வரும் சாம்சங் நிறுவனம் வருடத்திற்கு கிட்டதட்ட இலட்சம் கோடி வருமானம் பார்த்து வருகிறது.
இந்தியாவை பொறுத்தவரை சாம்சங் ஒரு மிகப்பெரிய சந்தையை உருவாக்கி வைத்து இருக்கிறது, மொபைல், ஏசிகள், ப்ரிட்ஜ்கள் என பல மின்னனு பொருள்களை தயாரித்து உலகளாவிய அளவில் சந்தைப்படுத்தி வரும் சாம்சங் நிறுவனம் மற்ற நிறுவனங்களுக்கு எல்லாம் சரவ்தேச அளவில் ஒரு மிகப்பெரிய போட்டி நிறுவனமாக இருந்து வருகிறது.
கடந்த வருடத்தில் மட்டும் சாம்சங் நிறுவனத்தின் நிகர வருமானம் என்பது ரூ 98,924 கோடியாக இருந்தது, அதில் ரூ 70,292 கோடி சாம்சங் நிறுவனத்தின் மொபைல் தயாரிப்பில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது, கடந்த வருடம் சாம்சங் நிறுவனத்தின் நிகர வருமானம் வெகுவாக உயர்ந்து இருந்தாலும் கூட, நிறுவனத்தின் நிகர இலாபம் என்பது கிட்டதட்ட 10 சதவிகிதம் சரிந்து இருந்தது.
இந்த நிகழ் வருடத்தில் சாம்சங் நிறுவனத்தின் நிகர வருமானம் கிட்டதட்ட 4% உயர்ந்து ரூ 1,02,626 ஆக இருக்கிறது, நிகர இலாபத்திலும் சாம்சங் இந்த வருடத்தில் சற்றே சாதித்து இருக்கிறது, கடந்த ஆண்டைக் காட்டிலும் சாம்சங் நிறுவனத்தின் நிகழ் நிகர இலாபம் கிட்டதட்ட இரண்டு மடங்கு உயர்ந்து ரூ 8,188 கோடியாக இருப்பதாக தகவல், தொடர்ந்து அடுத்த வருடத்திலும் இதே முனைப்போடு செயல்ப்ட சாம்சங் துணிந்து இருப்பதாக தகவல்.