• India
```

பல மடங்கு நஷ்டம்...9000 ஊழியர்களை வேலையை விட்டு நிறுத்த நிஸான் முடிவு...!

Nissan Announced 9000 Lay Offs In 2025

By Ramesh

Published on:  2024-11-08 03:03:36  |    197

Nissan Announced 9000 Lay Offs In 2025 - ஜப்பானிய கார் தயாரிப்பு நிறுவனமாக அறியப்படும் நிஸான், வரும் நிதி ஆண்டில் 9000 ஊழியர்களை வேலையை விட்டு நிறுத்த முடிவு செய்து இருப்பதாக ஒரு தகவல் வெளியாகி இருக்கிறது.

Nissan Announced 9000 Lay Offs In 2025 - ஜப்பானை மையமாக கொண்டு உலகளாவிய அளவில் செயல்பட்டு வருகிறது நிஸான் ஆட்டோ மொபைல் நிறுவனம், உலகின் 9 ஆவது மிகப்பெரிய கார் தயாரிப்பு நிறுவனமாக செயல்பட்டு வருகிறது, வருடத்திற்கு கிட்டதட்ட 30 இலட்சம் கார்களை தயாரித்து சந்தைப்படுத்தி வருகிறது, உலகின் மிகப்பெரிய எலக்ட்ரிக் வாகன தயாரிப்பாளராகவும் நிஸான் செயல்பட்டு வருகிறது.

ஆனால் சமீப காலமாக நிஸான் நிறுவனத்தால் உலகளாவிய போட்டிகளுக்கு இடையே ஈடு கொடுக்க முடியவில்லை, கடந்த நிதி ஆண்டில் நிஸான் நிறுவனத்தின் இலாபம் மட்டும் கிட்டதட்ட 93 சதவிகிதம் குறைந்து இருப்பதாக தகவல்,நிஸான் நிறுவனத்தின் முக்கிய தலைமை கார்லோஸ் கோஸ்னின் ஒரு சில பிரச்சினைகளால் விலகியதில் இருந்து நிஸான் சரிவு பாதையை நோக்கி சென்று கொண்டு இருக்கிறது.



இதன் காரணமாக நிறுவனத்தை நிலைப்படுத்த நிஸான் ஒரு சில அதிரடி நடவடிக்கைகளை நிறுவனத்திற்குள் எடுக்க இருப்பதாக நிஸான் நிறுவனத்தின் CEO அறிவித்து இருக்கிறார், அதாவது வரும் நிதி ஆண்டான 2025 யில் ஒட்டு மொத்த தயாரிப்புகளில் 20 சதவிகிதம் குறைக்க இருப்பதாகவும், கிட்ட தட்ட 9,000 ஊழியர்களை வேலையை விட்டு நிறுத்த முடிவு எடுத்து இருப்பதாகவும் தகவல் வெளியாகி இருக்கிறது, 

இது போக நிஸான் நிறுவனத்தின் முக்கிய தலைமைகள் தங்கள் சம்பளத்தை 50 சதவிகிதம் அளவிற்கு குறைக்க இருப்பதாகவும், மற்ற ஊழியர்களும் குறைக்க நினைத்தால் குறைக்கலாம் எனவும் நிஸான் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி உச்சிடா கூறி இருக்கிறார், இதன் மூலம் கொஞ்சம் கொஞ்சமாக நிஸான் நிறுவனம் பழைய பார்மிற்கு வரும் என நம்பிக்கை தெரிவித்து இருக்கிறார் உச்சிடா.