Mobile Exports In India Reached 2 Billion Mark - இந்தியா கடந்த அக்டோபரில் மட்டும் 2 பில்லியன் மொபைல்களை ஏற்றுமதி செய்து, ஏற்றுமதியில் புதிய உச்சம் தொட்டு இருக்கிறது.
Mobile Exports In India Reached 2 Billion Mark - உலகளாவிய அளவில் கிட்டதட்ட 9 பில்லியன் மொபைல் பயனாளர்கள் இருப்பதாக தகவல், இந்தியாவில் மட்டும் கிட்டதட்ட 1.15 பில்லியன் மொபைல் பயனாளர்கள் இருக்கிறார்கள், இந்தியாவில் மட்டும் கிட்டதட்ட 200 க்கும் மேற்பட்ட மொபைல் தயாரிப்பு கம்பெனிகள் இருக்கின்றன, சாம்சங் இந்தியாவின் மிகப்பெரிய மற்றும் அதிகப்படியான மொபைல் தயாரிப்பாளராக இருக்கிறது.
இந்திய கடந்த 7 மாதத்தில் மட்டுமே 10 பில்லியன் மொபைல் தயாரிப்புகளை ஏற்றுமதி செய்து இருக்கிறது, கடந்த அக்டோபரில் மட்டும் கிட்டதட்ட 2 பில்லியன் மொபைல்களை ஏற்றுமதி செய்து இருக்கிறது, இது இதுவரைக்கும் இல்லாத அளவிலான வரலாறு காணாத ஏற்றுமதியாக பார்க்கப்படுகிறது, இந்த வருடத்திற்குள் இந்தியாவின் ஒட்டு மொத்த மொபைல் ஏற்றுமதி 15 பில்லியனை தாண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கடந்த 2014 க்கு முன்பாக இந்தியாவில் இரண்டே இரண்டு மொபைல் தயாரிப்பு நிறுவனங்கள் மட்டுமே இருந்தது, ஆனால் தற்போது இரு நூறுக்கும் மேற்பட்ட மொபைல் தயாரிப்பு நிறுவனங்கள் இருக்கின்றன, இந்தியாவில் தயாரிக்கப்படும் மொபைல்களில் பெரும்பாலானவைகள் அமெரிக்காவிற்கு ஏற்றுமதி செய்யப்படுவதாக தகவல்,
இந்தியா உலகளாவிய அளவில் 2 ஆவது மிகப்பெரிய மொபைல் தயாரிப்பு நாடாக இயங்கி வருகிறது, சீனா உலகளாவிய அளவில் முதல் மிகப்பெரிய மொபைல் தயாரிப்பு நாடாக செயல்பட்டு வருகிறது, இன்னும் சில மொபைல் தயாரிப்பு நிறுவனங்கள் இந்தியாவிற்குள் நுழைய முயற்சித்து வருகின்றன, அது சாத்தியம் ஆகும் பட்சத்தில் இந்தியா உலகின் மிகப்பெரிய மொபைல் தயாரிப்பு நாடாக உருவெடுக்கும்.