• India
```

இனி நீங்க அடிக்கடி காருக்கு சார்ஜ் போட தேவையில்ல...காருக்கு சோலார் பெயிண்ட் அடிச்சா போதும்...!

Mercedes Solar Paint

By Ramesh

Published on:  2025-02-25 15:43:57  |    904

Solar Paints In EV Cars - பென்ஸ் நிறுவனம் அறிமுகப்படுத்தி இருக்கும் சோலார் பெயிண்ட்ஸ் கார்கள் குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

பெட்ரோல் கார்கள், டீசல் கார்கள், CNG கார்கள், ஹைட்ரஜன் கார்கள் என படிப்படியான முன்னேற்றத்தை நோக்கி சென்ற ஆட்டோமொபைல் நிறுவனங்களின் தற்கால படிநிலை என்பது எலக்ட்ரிக் ரக கார்களாக இருக்கிறது, பெரும்பாலும் உலகில் இருக்கும் அனைத்து ஆட்டோ மொபைல் நிறுவனங்களுமே பசுமை கார்கள் தயாரிப்பிற்கு மாறி இருக்கிறது.

இன்னும் ஒரு படிக்கு மேல் டெஸ்லா ஆட்டோமேட்டடு எலக்ட்ரிக் கார்கள் தயாரிப்பில் ஈடுபட்டுக் கொண்டு இருக்கிறது, முதற்கட்டமாக டெஸ்லா ஆட்டோமேட்டடு டாக்ஸிகளை, அமெரிக்காவின் சாலைகளில் வருகின்ற மார்ச் மாதத்தின் நடு வாரங்களில் பரிசோதனை செய்ய இருக்கிறது, வெற்றிகரமாக பரிசோதிக்கப்படும் பட்சத்தில் இந்த ஆட்டோமேட்டடு டாக்ஸிகள் உலகம் முழுக்க வலம் வரும்.



பொதுவாக எலக்ட்ரிக் வாகனங்களுக்கு இருக்கும் மிகப்பெரிய பிரச்சினை தினமும் சார்ஜ் செய்ய வேண்டிய அவசியம் தான், அமெரிக்காவில் பிரச்சினை இல்லை, டெஸ்லா முக்கிற்கு முக்கு சார்ஜிங் ஸ்டேசன்களை வைத்து இருக்கிறது, ஆனால் பின் தங்கிய நாடுகள், வளரும் நாடுகளில் எல்லாம் பெரும்பாலும் சார்ஜிங் ஸ்டேசன்கள் என்பது 100 கிமீக்கு ஒன்று இருப்பது கூட சந்தேகம் தான்.

வாடிக்கையாளர்களின் இந்த பிரச்சினையை கருத்தில் கொண்ட மெர்சடஸ் பென்ஸ் நிறுவனம், சோலார் பெயிண்ட்கள் மூலம் பேட்டரிகளுக்கு சார்ஜ் ஏற்றும் ஒரு தீர்வை கண்டு பிடித்து இருக்கிறது, வெறும் 5 மைக்ரோ மீட்டர் திக்னஸ் கொண்ட இந்த பெயிண்டின் மூலம் வருடத்திற்கு 7,456 மைல்கள் செல்லும் தூரம் அளவிற்கு சார்ஜ் ஏற்ற முடியும் என்கிறது மெர்சடஸ் பென்ஸ் நிறுவனம்.

" இனி வாடிக்கையாளர்கள் எங்கையாவது செல்லும் போது சார்ஜரை தேட வேண்டிய அவசியம் இல்லை, வண்டியை பொதுவெளியில் விட்டால் போதும் அதுவாக சார்ஜ் ஏறிக் கொள்ளும் "