Madura Coats Tuticorin Announced Its Closure - தூத்துக்குடி பீச் ரோட்டில் செயல்பட்டு வந்த 100 வருட பாரம்பரியம் மிக்க மதுரா கோட்ஸ் மில் நிறுவனம் மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
Madura Coats Tuticorin Announced Its Closure - கிட்டதட்ட ஆங்கிலேயர்கள் காலத்தில் இருந்து செயல்பட்டு வரும் மதுரா கோட்ஸ் நிறுவனம் கலர் நூல்கள், ஜிப்கள், பருத்தி, செயற்கை நூல்கள், தொழிற்சாலைகளுக்கான பேப்ரிக்ஸ் உள்ளிட்டவைகளை தயாரித்து உலகளாவிய அளவில் ஏற்றுமதி செய்து வருகின்றன, 1970 முதல் 1980 காலக்கட்டங்களிலேயே பல நாடுகளுக்கு ஏற்றுமதியை சந்தையை கொண்டு இருந்தது மதுரா கோட்ஸ்.
தென்மாவட்டத்தில் தூத்துக்குடியில் வடக்கு பீச் ரோட்டிலும் இந்த உலக புகழ் பெற்ற மதுரா கோட்ஸ் மில் ஒன்று செயல்பட்டு வந்தது, தினமும் மூன்று ஷிப்ட்கள், ஒவ்வொரு ஷிப்ட்களுக்கும் நூற்றுக்கும் மேற்பட்ட பணியாளர்கள் என கிட்டதட்ட தூத்துக்குடி, திருநெல்வேலியை சேர்ந்த பலருக்கும் பொருளாதார மையமாக இந்த மதுரா கோட்ஸ் அக்காலத்தி விளங்கி வந்தது.
முன்பாக தூத்துக்குடி, திருநெல்வேலி மாவட்டத்தின் ஒரு பகுதியாக மட்டுமே இருந்து வந்தது, ரயில் சேவை கூட அக்காலக்கட்டத்தில் கிடையாது, இந்த மதுரா கோட்ஸ் நிறுவனத்திற்கு சரக்கு ஏற்றி வருவதற்காகவே தூத்துக்குடியில் ரயில் சேவை துவங்கியதாக கூறப்படும், அதற்கு பின்னராக தான் பயணிகள் ரயில் சேவை எல்லாம் தூத்துக்குடியில் அமைக்கப்பட்டது.
அத்தகைய பிரசித்தி மிக்க மற்றும் கிட்டதட்ட 100 ஆண்டுகள் பழமையான தூத்துக்குடி மதுரா கோட்ஸ் நிறுவனம் கடந்த சில வருடங்களாக உற்பத்தியில் மெலிந்து வந்தது, நிறுவனத்தின் வருமானமும் வெகுவாக குறைந்தும் வந்த காரணத்தால் உற்பத்தி செயல்பாடுகள் முற்றிலுமாக நிறுத்தப்பட்டது, தற்போது தூத்துக்குடி மதுரா நிறுவனம் முழுவதும் மூடப்படுவதாக மதுரா கோட்ஸ் தலைமை நிர்வாகம் அறிவித்து இருக்கிறது.