Lenskart Trimmed Losses By 84% In FY24 - பிரபல லென்ஸ்கார்ட் நிறுவனம் கடந்த 2023 யில் ஏற்பட்ட இழப்பை தற்போது நடப்பு வருடத்தில் 84 சதவிகிதம் குறைத்து இருப்பதாக தகவல் விடுத்து இருக்கிறது.
Lenskart Trimmed Losses By 84% In FY24 - குருகிராமை மையமாக கொண்டு செயல்பட்டு வரும் இந்திய மல்டி நேஷனல் கண்ணாடி தயாரிக்கும் நிறுவனம் தான் லென்ஸ்கார்ட், மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் முன்னாள் ஊழியராக அறியப்படும் பியூஷ் பன்சால் அவர்களால் துவங்கப்பட்டது தான் லென்ஸ்கார்ட், கடந்த 2010 முதல் செயல்பட்டு வரும் லென்ஸ்கார்ட் உலகளாவிய அளவில் 2,500 க்கும் மேற்பட்ட கிளைகளை கொண்டு இருக்கிறது,
Owndays, Neso பிராண்ட் போன்ற துணை நிறுவனங்களுடன் பத்துக்கும் மேற்பட்ட நாடுகளில் லென்ஸ்கார்ட் செயல்பட்டு வருகிறது, கடந்த 2023 ஆம் ஆண்டில் லென்ஸ்கார்ட்டின் வருவாய் 5,427 கோடியாக இருந்தாலும் கூட அதற்கு முந்தைய ஆண்டை விட 40 சதவிகிதத்திற்கும் மேல் அதிகரித்தாலும் கூட, 2023 யில் லென்ஸ்கார்ட் கிட்டதட்ட 63 கோடி நட்டத்தை சந்தித்து இருந்தது குறிப்பிடத்தக்கது,
நடப்பு நிதியாண்டிலும் லென்ஸ்கார்ட் நஷ்டத்தை சந்திக்காமல் இருக்க முடியவில்லை, கிட்ட தட்ட 10 கோடி அளவில் நஷ்டத்தை சந்தித்து இருக்கிறது, ஆனால் கடந்த ஆண்டு இழப்பை விட 84 சதவிகிதம் இழப்பை குறைத்து இருக்கிறது, லென்ஸ்கார்ட்டின் பெரும்பாலான வருமானங்கள் இந்தியாவை சார்ந்து தான் இருக்கிறது, அதே சமயத்தில் இழப்புகள் வெளிநாட்டு கிளைகளில் அதிகமாக இருக்கிறது,
இனிமேல் லென்ஸ்கார்ட் இந்தியாவை மையமாக கொண்டு அதன் வர்த்தகத்தை விரிவு படுத்த இருப்பதாக அதன் தலைமை நிர்வாக அதிகாரி கூறி இருக்கிறார், 2024 முடிவதற்குள் புதிதாக 400 கிளைகளை லென்ஸ்கார்ட் திறக்க இருக்கிறது, அதில் 92 சதவிகித கிளைகள் இந்தியாவில் இருக்கும் என கூறப்படுகிறது, 2025 யின் இறுதிக்குள் லென்ஸ்கார்ட் இலாபகரமான் நிறுவனமாக மாறும் என நிறுவனம் அறிவித்து இருக்கிறது.