• India

2025 யிலும் தொடரும் வேலை நீக்கங்கள்...எந்தெந்த நிறுவனங்கள்...வேலை நீக்கத்தை அறிவிக்க போகிறது தெரியுமா...?

LayOffs Will Continue In 2025

By Ramesh

Published on:  2025-01-11 01:19:27  |    17

LayOffs Will Continue In 2025 - கடந்த 2024 நிதி ஆண்டில் மட்டும் உலகளாவிய அளவில் கிட்டத்தட்ட ஒரு இலட்சத்து ஐம்பதாயிரம் தொழில் நுட்ப நிறுவன ஊழியர்கள் வேலையை இழந்து இருக்கின்றனர், இன்டெல், டெஸ்லா, சிஸ்கோ, மைக்ரோசாஃப்ட் உள்ளிட்ட பல சர்வதேச நிறுவனங்கள் கடந்த 2024 யில் தங்களது நிறுவனத்தில் வேலை இழப்பை அறிவித்து இருந்தன. ஆட்டோமொபைல் நிறுவனமும் ஆட்டம் கண்டது,

எலக்ட்ரிக் கார்களின் வருகையாலும், கார் தயாரிப்பதற்கான மூலப்பொருள்களின் விலை உயர்வாலும் உலகின் முன்னனி பிராண்டுகள் பலவும் ஆட்டோமொபைல் மார்க்கெட்டில் பின் தங்கின, பெரும் நஷ்டத்தையும், வருமான இழப்பையும் அடைந்தன, இதனால் ஆட்டோமொபைல் இண்டஸ்ட்ரீயும் 2024 யில் பெரும் வேலை இழப்பை சந்தித்தது என்று தான் சொல்ல வேண்டும்,



இந்த நிலையில் 2025 க்கான வேலை இழப்பை ஜனவரி முதலே ஆரம்பித்து விட்டன ஒரு சில நிறுவனங்கள், இந்த வேலை இழப்பை அறிவித்து இருக்கும் பெரும்பாலான நிறுவனங்கள் அமெரிக்க நிறுவனங்களாக இருக்கின்றன, Black Rock நிறுவனம் 200 வேலை இழப்பை 2025 யில் அறிவிக்க இருக்கிறதாம், Bridgewater நிறுவனம் 2025 யில் ஒட்டு மொத்த ஊழியர்களுள் 7% ஊழியர்களை வேலை நீக்கம் செய்ய இருக்கிறதாம்,

இது போக Washington Post 100 ஊழியர்களையும், Ally நிறுவனம் 500 ஊழியர்களையும் 2025 யில் வேலை நீக்கம் செய்ய முடிவெடுத்து இருக்கிறதாம், இது போக Microsoft நிறுவனமும் இந்த வருடம் வேலை இழப்பை அறிவிக்க இருக்கிறதாம், ஆனால் எத்துனை எண்ணங்கள் என்பது குறித்து எந்த ஒரு அதிகாரப்பூர்வ எண்ணிக்கையும் இல்லை என கூறப்படுகிறது, AI பயன்பாடு அதிகரிக்கும் பட்சத்தில் இன்னும் வேலை இழப்பு அதிகரிக்க வாய்ப்பு இருக்கிறதாம்.