Jaguar Logo Change, Elon Musk Viral Comment - பிரபல ஆட்டோ மொபைல் நிறுவனம் ஆக அறியப்படும் Jaguar தனது Logo வை மாற்றி இருக்கிறது, அது குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
Jaguar Logo Change, Elon Musk Viral Comment - பிரபல பிரிட்டிஷ் மல்டி நேஷனல் கார் தயாரிப்பு நிறுவனம் ஆக அறியப்படும் Jaguar நிறுவனம், தனது Logo வை மாற்றி புதிய Logo ஒன்றை வெளியிட்டு இருக்கிறது, இது போக Jaguar இனி முழுக்க முழுக்க எலக்ட்ரிக் கார்களை தான் இனி தயாரிக்க இருப்பதாகவும் தகவல், தற்போதைக்கு 2026 ஆம் ஆண்டு 3 Luxury எலக்ட்ரிக் கார்களை வெளியிட Jaguar திட்டமிட்டு இருக்கிறதாம்.
Jaguar கடந்த நிதி ஆண்டைக் காட்டிலும், இந்த நிதி ஆண்டில் நிகர வருமானத்தில் சிறப்பாக செயல்பட்டாலும், கார் விற்பனையில் சற்று மந்தம் அடித்துக் கொண்டு தான் இருக்கிறது, உலகளாவிய அளவில் நிலவும் ஆட்டோ மொபைல் போட்டியால் தற்போது Jaguar போன்ற Luxury கார்களுக்கு பெரிதாக மதிப்பில்லை, இதனால் தனது போட்டி களத்தை மாற்ற jaguar திட்டமிட்டு இருக்கிறது.
முதற்கட்டமாக Luxury எலக்ட்ரிக் கார்களை தயாரித்து வெளியிடுவதை Jaguvar நோக்கமாக கொண்டு இருக்கிறது, அது போக இனி முழுக்க முழுக்க எலக்ட்ரிக் கார்களை மட்டும் தயாரிக்க ஜாகுவார் முடிவெடுத்து இருக்கிறதாம், சமீபத்தில் அதற்கான புதிய Logo வை வெளியிட்ட Jaguar நிறுவனத்திற்கு நெட்டிசன்கள் அனைவரும் 'Go Back' என்ற பதிலை அளித்து வருகின்றனர். பழைய Logo வே நன்றாக இருந்தது என நெட்டிசன்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.
இது போக டெஸ்லா நிறுவனத்தின் நிறுவனர் எலான் மஸ்க்கும், ஜாகுவார் நிறுவனம் வெளியிட்ட Logo விற்கு கீழ் ‘நீங்கள் கார் எல்லாம் தயாரிக்கிறீர்களா?’ என கிண்டல் அடிக்கும் விதத்தில் பதிவிட்டு இருக்கிறார், ஜாகுவார் நிறுவனமும் அதற்கு 'ஆம் வெளியிடுகிறோம் வேண்டுமென்றால் வந்து பாருங்கள்' என ரீப்ளை செய்து இருக்கிறது.