• India
```

இந்தியன் ஆயில் கார்பரேசனின் நிகர வருமானம் 98 சதவிகிதம் வரை சரிவு...!

IOC Profit Plunges By 98 Percentage

By Ramesh

Published on:  2024-10-29 03:54:57  |    171

Indian Oil Corporation Profit Plunges By 98% - பொதுத்துறை நிறுவனமாக அறியப்படும் இந்தியன் ஆயில் கார்பரேசனின் வருமானம் கிட்டதட்ட 98 சதவிகிதம் வரை சரிந்திருப்பது அதிர்ச்சி அளிப்பதாக இருக்கிறது.

IOC Profit Plunges By 98% - இந்திய அரசின் கீழ் செயல்பட்டு வரும் இந்தியன் ஆயில் கார்பரேசன் 1959 ஆம் ஆண்டு இந்தியாவில் தோற்றுவிக்கப்பட்டது, டெல்லியை தலைமையிடமாக கொண்டு இயங்கி வரும் இந்தியன் ஆயில் கார்பரேசன் இந்தியாவில் மட்டும் அல்லாது இலங்கை, மாரிட்டியஸ் ஒரு சில மத்திய கிழக்கு நாடுகளிலும் தங்களது நிறுவனத்தை விரிவு படுத்தி சந்தைப்படுத்தி வருகிறது.

லூப்ரிகண்ட்ஸ், பெட்ரோலியம், பெட்ரோ கெமிக்கல்ஸ், LNG, இயற்கை எரிவாயு உள்ளிட்ட தயாரிப்புகளில் ஈடுபட்டு வரும் இந்தியன் ஆயில் கார்பரேசன் வருடத்திற்கு அதை சந்தைப்படுத்துவதன் மூலம் 8 இலட்சம் கோடிகளுக்கு மேல் வருமானம் ஈட்டி வருகிறது, பார்ட்டியூன் குளோபல் 500 நாளிதழில் உலகளாவிய அளவில் மிகப்பெரிய நிறுவனங்களின் வரிசையில் இந்தியன் ஆயில் கார்பரேசன் 94 ஆவது இடத்தை பிடித்தது.



இவ்வாறாக இந்தியாவின் மிகப்பெரிய இலாபம் தரும் நிறுவனமாக அறியப்படும் இந்தியன் ஆயில் கார்பரேசன் கடந்த ஆண்டு இதே இரண்டாவது கால் இறுதியில் கிட்ட தட்ட 13,000 கோடி வருமானம் ஈட்டி இருந்தது, ஆனால் இந்த ஆண்டு இன்றைய சூழலில் இந்த இரண்டாவது கால் இறுதியில் வெறும் 180.01 கோடி மட்டுமே வருமானம் ஈட்டி இருக்கிறது, கிட்டதட்ட இந்தியன் ஆயில் நிறுவனத்தின் வருமானம் கடந்த ஆண்டின் இதே நிலையை ஒப்பிடும் போது 98 சதவிகிதம் சரிந்து இருக்கிறது.

இதற்கு காரணம் என்ன என்று பார்க்கும் போது, எலக்சனுக்கு முன்பாக மட்டுப்படுத்தப்பட்ட பெட்ரோல், டீசலின் விலை, அது போக தற்போது எந்த ஒரு விலை ஏற்றமும் இல்லாமல் ஒரே நேர்க்கோட்டில் சென்று கொண்டு இருக்கும் ஆயில்களின் விலை, சுத்திகரிப்பு செலவு அதிகரிப்பு, சரியான சந்தைப்படுத்துதல் இல்லாமை இவைகளால் தான் இந்தியன் ஆயில் கார்பரேசனின் வருமானம் இந்த நிலைக்கு தள்ளப்பட்டு இருப்பதாக தகவல்.