India Rice Production Expectation 2025 - இந்தியாவின் அரிசி உற்பத்தி 2025 காரிப் பருவத்தை எட்டும் போது 120 மில்லியன் டன்களை எட்டும் என எதிர்பார்க்கப்படுவதாக ஒன்றிய அரசு அறிவித்து இருக்கிறது.
India Rice Production Expectation - உலகளாவிய அளவில் ஆன அரிசி உற்பத்தியில் சீனாவிற்கு அடுத்தபடியாக இரண்டாம் இடத்தில் இருக்கிறது இந்தியா, கிட்ட தட ஒட்டு மொத்த உலகளாவிய அரிசி உற்பத்தியில் சீனா 28 சதவிகித கொள்ளவை கொண்டு இருக்கிறது, இந்தியா உலகளாவிய அரிசி உற்பத்தியில் 26 சதவிகித கொள்ளவை கொண்டு இருக்கிறது, பாசுமதி அரிசி ஏற்றுமதியில் உலகளாவிய அளவில் நம்பர் 1 இடத்தை இந்தியா தக்க வைத்து இருக்கிறது.
கடந்த 2023-24 காலக்கட்டத்தில் இந்தியாவின் ஒட்டு மொத்த அரிசி உற்பத்தி 113 மில்லியன் டன்களாக இருந்தது, அடுத்த ஆண்டு காரிப் பருவத்தில் அதாவது 2024-25 காலக்கட்டத்தில் இந்தியாவின் அரிசி உற்பத்தி மேலும் 7 மில்லியன் டன் அளவிற்கு அதிகரிக்க கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது, அதாவது 2025 காரிப் பருவத்தை எட்டும் போது இந்தியாவின் அரிசி உற்பத்தி 120 மில்லியன் டன்கள் ஆக இருக்கும்,
அது போல மக்காச்சோள உற்பத்தி 2024-25 காரிப் பருவத்தில் 25.54 மெட்ரிக் டன்னாக இருக்கும், கடந்த ஆண்டில் மக்காச்சோள உற்பத்தி காரிப் பருவத்தில் 22.54 மெட்ரிக் டன்னாக இருந்தது, அதே சமயத்தில் கம்பு உற்பத்தி அடுத்த காரிப் பருவத்தில் 9.37 மெட்ரிக் டன்னாக குறையும், கம்பு பயன்பாடு தேசத்தின் வெகுவாக குறைந்து வருவதால் விவசாயிகள் ஒரு சிலர் கம்பு உற்பத்தியை கைவிட்டு இருப்பதாக தகவல்,
2024-25 காலக்கட்டத்தில் இந்தியாவின் ஒட்டு மொத்த தானிய உற்பத்தி 164.70 மெட்ரிக் டன் ஆக இருக்கும் என ஒன்றிய அரசு எதிர்பார்த்து இருக்கிறது, இது கடந்த ஆண்டை விட கிட்டதட்ட 10 மெட்ரிக் டன் அளவிற்கு அதிகம் ஆகும், பருவ கால சூழல் உற்பத்திக்கு நன் விதமாக வழி விடும் பட்சத்தில் இந்த எதிர்பார்ப்பு அப்படியே பூர்த்தி ஆகும், இந்தியாவில் கால நிலை மாற்றத்தால் 13.55 சதவிகித விவசாயம் பாதித்து இருப்பது குறிப்பிடத்தக்கது.