India Aims to Increase Its Local Defence Aircraft Production - பாதுகாப்பு தளவாட விமானங்கள் தயாரிப்பிற்காக வெளிநாடுகளை சார்ந்து இருக்காமல் உள்நாட்டிலேயே தயாரிக்க இந்தியா விருப்பம்.பாதுகாப்பு தளவாட விமானங்கள் தயாரிப்பிற்காக வெளிநாடுகளை சார்ந்து இருக்காமல் உள்நாட்டிலேயே தயாரிக்க இந்தியா விருப்பம்.
India Aims to Increase Its Local Defence Aircraft Production - பொதுவாக இந்தியா அதிநவீன பாதுகாப்பு தளவாட விமானங்களுக்காக ரஷ்யா, ஜெர்மனி, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளை சார்ந்து இருக்கிறது, இது இந்தியாவின் பாதுகாப்பு குறித்த விடயம் என்பதால், இந்தியா பாதுகாப்பு தளவாட விமான தயாரிப்பிலும் தன்னிறைவு பெற வேண்டியது அவசியம் ஆகிறது, இதனை கருத்தில் கொண்டு தான் இந்தியா உள்நாட்டிலேயே பாதுகாப்பு தளவாட விமானங்களை தயாரிக்க முடிவு செய்து இருக்கிறது.
இதற்காக ஐரோப்பிய ஏர்கிராப்ட் நிறுவனமான ஏர்பஸ் நிறுவனத்துடன் இந்தியா ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்து இட்டு இருக்கிறது, இந்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் படி ஏர் பஸ் நிறுவனமும், இந்தியாவுன் இணைந்து குஜராத்தில் ஒரு பிளாண்ட் அமைக்க திட்டமிட்டு இருக்கிறது, அந்த பிளாண்ட்டில் இந்தியா முழுக்க முழுக்க பாதுகாப்பு தளவாடங்களுக்கு தேவையான விமானங்களை தயாரிக்க இருக்கிறதாம்.
2025 இறுதிக்குள் கட்டுமான வேலைகள் தேவையான உற்பத்தி மெசின்கள் எல்லாம் இறக்குமதி செய்யப்பட்டு 2026 யில் முதல் விமானம் உற்பத்தி செய்யப்படும் என ஒன்றிய அரசு அறிவித்து இருக்கிறது, இத்திட்டத்தின் முழுமையான நோக்கம் என்பது முழுமையாக நிறைவேற எப்படியும் இன்னும் 10 வருடங்கள் ஆகலாம், ஆனால் தற்போதைக்கு இது அந்த நோக்கத்திற்கான முதல் விதையாக இருக்கலாம்.
ஏன் இந்திய அரசு உள்நாட்டில் பாதுகாப்பு தளவாட விமானங்களை தயாரிக்க முடிவெடுத்து இருக்கிறது என்பதற்கு ஒரு சில காரணங்கள் இருக்கிறது, முதல் காரணம் பாதுகாப்பு, இரண்டாவது காரணம் ரஷ்யா உள்ளிட்ட நாடுகள் இந்தியாவிற்கு நல்லிணக்கம் இல்லாத அண்டை நாடுகளான பாகிஸ்தான் மற்றும் சீனாவுடன் நெருங்கிய தொடர்பு வைத்திருப்பதும் ஒரு காரணமாக கூறப்படுகிறது.