• India
```

பிரபல ஹீண்டாய் நிறுவனத்தின் நிகர இலாபம்..16 சதவிகிதம் அளவிற்கு சரிந்தது..!

Hyundai Net Profit Falls 16 Percentage

By Ramesh

Published on:  2024-11-12 21:56:41  |    161

Hyundai Net Profit Falls 16% - பிரபல கார் தயாரிப்பு நிறுவனமாக அறியப்படும் ஹீண்டாய் நிறுவனத்தின் நிகர இலாபம் 16 சதவிகிதம் அளவிற்கு சரிந்து இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

Hyundai Net Profit Falls 16% - தென்கொரியாவின் சியோல் நகரை மையமாக கொண்டு செயல்பட்டு வரும் ஹீண்டாய் நிறுவனம் உலகளாவிய அளவில் கார் தயாரிப்பில் பிரபல நிறுவனம் ஆக செயல்பட்டு வருகிறது, வருடத்திற்கு கிட்டதட்ட 25 இலட்சம் கார்களை தயாரித்து உலகளாவிய அளவில் சந்தைப்படுத்தி வருகிறது, அதில் இந்தியாவில் மட்டும் தயாரிக்கப்படும் கார்கள் 8 இலட்சங்களுக்கு நெருக்கமாக இருக்கிறது.

1967 முதல் 57 வருடங்களாக செயல்பட்டு வரும் ஹீண்டாய் நிறுவனம் பல முன்னனி கார்களை தயாரிப்பதில் சிறந்து விளங்கி வருகிறது, டொயட்டோ, வோல்க்ஸ்வேகன் உள்ளிட்ட கார் நிறுவனங்களுக்கு அடுத்து உலகில் அதிக கார்களை தயாரிப்பது ஹீண்டாய் நிறுவனம் தான், உலகளாவிய அளவில் 30 ஆவது சிறந்த பிராண்டாக ஹீண்டாய் தெரிவு செய்யப்பட்டு இருக்கிறது.



193 நாடுகளில் ஐந்தாயிரத்திற்கும் மேற்பட்ட டீலர்ஷிப் மற்றும் ஸ்டோர்களை கொண்டு ஹீண்டாய் இயங்கி வருகிறது, இந்தியாவில் இரண்டாவது மிகப்பெரிய கார் நிறுவனமாக ஹீண்டாய் செயல்பட்டு வருகிறது, ஆனால் சமீப காலமாக ஹீண்டாய் நிறுவனத்தின் நிகர வருமானம் வெகுவாக சரிந்து வருகிறது, கடந்த ஆண்டை ஒப்பிடும் போது ஹீண்டாய் நிறுவனத்தின் Q2 நிகர வருமானம் 16% சரிந்து இருக்கிறது.

கடந்த ஆண்டு 18,659,69 கோடியாக இருந்த நிகர வருமானம் தற்போது 17,260 கோடியாக சரிந்து இருக்கிறது, ஹீண்டாய் நிறுவனத்தின் நிகர இலாபமும் கடந்த ஆண்டை காட்டிலும் 16% அளவிற்கு சரிந்து இருக்கிறது, அதாவது கடந்த ஆண்டில் 1,628.46 கோடியாக இருந்த நிகர இலாபம் தற்போது 1,375.47 கோடியாக இருக்கிறது, கார் விற்பனையும் பெரிதாக சரிந்து இருப்பதால் மார்க்கெட்டிங்கில் புதிய முயற்சியை எடுக்க ஹீண்டாய் முன் வந்துள்ளது.