• India
```

ஹீண்டாய் நிறுவனத்திற்கு புதிய தலைமை செயல் அதிகாரி...என்ன எதிர்பார்க்கலாம்...?

Hyundai Motors Appointed First Ever Foreign CEO

By Ramesh

Published on:  2024-11-16 06:58:37  |    150

Hyundai Motors First Ever Foreign CEO - ஹீண்டாய் நிறுவனத்திற்கு முதன்முறையாக வெளிநாடுகளில் இருந்து ஒருவர் தலைமை செயல் அதிகாரியாக நியமிக்கப்பட்டு இருக்கிறார்.

Hyundai Motors First Ever Foreign CEO - தென்கொரியாவை மையமாக கொண்டு இயங்கும் பிரபல கார் உற்பத்தியாளரான ஹீண்டாய் நிறுவனத்திற்கு ஜோஸ் முனோஸ் புதிய தலைமை செயல் அதிகாரியாக நியமிக்கப்பட்டு இருக்கிறார், இதுவரை தென்கொரியாவை சார்ந்தவர்களே ஹீண்டாய் நிறுவனத்தின் தலைமைப் பொறுப்பில் இருந்து வந்த நிலையில் முதன் முறையாக ஒரு அயலவர் நியமிக்கப்பட்டு இருக்கிறார்.

பிரபல நிஸான் கார் நிறுவனத்தில் 15 ஆண்டுகளாக பணி புரிந்து வந்த ஜோஸ் முனோஸ் 2019 ஆம் ஆண்டு ஹீண்டாய் நிறுவனத்தில் இணைந்தார், வட மற்றும் தென் அமெரிக்காவில் செயல்படும் ஹீண்டாய் நிறுவனத்தின் செயல்பாடுகளுக்கு ஜோஸ் முனோஸ் பொறுப்பேற்று இருந்தார், முனோஸ் வெளிநாட்டு சந்தை குறித்த முன்னோட்டம் உள்ளவர் என்பதால் தான் இந்த முடிவு எடுக்கப்பட்டு இருப்பதாக தகவல்.



தொடர்ந்து உள்நாட்டு தலைமைகளே நியமிக்கப்படுவதால், அவர்களுக்கு அயல் நாட்டு சந்தை குறித்த கண்ணோட்டம் என்பது பெரிதாக இல்லை, அதன் காரணமாகவே முதன் முறையாக ஹீண்டாய் நிறுவனத்தில் ஒரு அயலவர் தலைமை செயல் அதிகாரியாக நியமிக்கப்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது, சரிந்து வரும் ஹீண்டாய் எலக்ட்ரிக் பகுதியை முனோஸ் மீட்டெடுப்பார் என்ற நம்பிக்கையில் பொறுப்பு கொடுக்கப்பட்டுள்ளது.

முனோஸ்சின் செயல்பாடுகளால் வட மற்றும் தென் அமெரிக்காவில் ஹீண்டாய் நிறுவனம் புதிய உச்சம் பெற்று இருந்தது, ஜியார்ஜியாவில் புதிய ஹீண்டாய் ஆலையும் திறக்கப்பட்டுள்ளது, நிகழ் ஆண்டில் அமெரிக்காவில் நம்பர் 1 விற்பனையாளராகவும் ஹீண்டாய் திகழ்ந்து வருகிறது. இதனை எல்லாம் கருத்தில் கொண்டே எதிர்கால ஹீண்டாய் நிறுவனத்தின் செயல்பாடுகள் முனோஸ்சின் கைகள் ஒப்படைக்கப்பட்டு இருக்கிறது.