Honda Car Price Hike - தொடர்ந்து கார் தயாரிப்பதற்கான மூலப் பொருள்களின் விலை உயர்ந்து வருவதால், பெரும்பாலான கார் நிறுவனங்கள் தொடர்ந்து கார் விலை உயர்வை அறிவித்து வருகின்றன, அதிகபட்சமாக மாருதி சுசுகி நிறுவனம் மற்றும் BMW இந்தியா நிறுவனம், அடுத்த ஆண்டு துவக்கம் முதல் ஒரு குறிப்பிட்ட வகை கார்களுக்கு கிட்டத்தட்ட 4 சதவிகிதம் வரை விலை உயர்வை அறிவித்து இருக்கிறது.
ஸ்கோடா ஆட்டோ இந்தியா, டாடா மோட்டார்ஸ், மஹிந்திரா, மெர்சடஸ் பென்ஸ் உள்ளிட்ட நிறுவனங்கள் ஜனவரி 2025 முதல் 3% அளவிற்கு கார் விலையை உயர்த்த இருப்பதாக அறிவித்து இருக்கிறது, கியா இந்தியா நிறுவனம் 2% அளவிற்கு கார் விலையை உயர்த்த இருப்பதாகவும், ஹீண்டாய் நிறுவனம் குறிப்பிட்ட வகை கார்களுக்கு ரூ 25,000 வரை கார் விலையை உயர்த்த இருப்பதாகவும் தகவல்.
இந்த நிலையில் ஜப்பானை மையமாக கொண்டு செயல்பட்டு வரும் ஹோண்டா நிறுவனமும் இந்தியாவில் கார் விலையை உயர்த்த முடிவு எடுத்து இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது, இந்த கார் விலை உயர்வு என்பது கிட்டத்தட்ட 2 சதவிகிதமாக இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது, இந்த விலை உயர்வு ஜனவரி 2025 முதல் அமல் ஆக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கிட்டத்தட்ட அனைத்து கார் நிறுவனங்களுமே கார் விலை உயர்வை ஜனவரி முதல் அறிவித்து இருக்கின்றன, இதற்கு காரணமாக சொல்லப்படுவது மூலதனப்பொருள்கள் என கூறினாலும் கூட, அடுத்த வருடம் விலை உயர்ந்து விடும் என வாடிக்கையாளர்களிடையே ஒரு பதற்றத்தை ஏற்படுத்தி கார் விற்பனையை பெருக்கும் கார் நிறுவனங்களின் நோக்கம் எனவும் கூறப்பட்டு வருகிறது.