• India
```

தள்ளாடும் ஜெர்மனி...ஆட்டம் காணும் ஆட்டோமொபைல் தொழிற்சாலைகள்...!

German Auto Mobile Industries Struggles

By Ramesh

Published on:  2024-11-28 04:19:38  |    148

German Auto Mobile Industries Struggles - தொடர் வருமான இழப்புகளால் ஜெர்மனியின் ஆட்டோமொபைல் தொழிற்சாலைகள் என்ன செய்வது என்று தெரியாமல் திகைத்து வருகின்றன.

German Auto Mobile Industries Struggles - ஜெர்மனியை பொறுத்தவரை உலகளாவிய அளவில் நம்பர் 1 ஆட்டோமொபைல் ஏற்றுமதியாளராக விளங்கி வருகிறது, ஜெர்மனி ஆட்டோமொபைல் ஏற்றுமதியில் மட்டும் வருடத்திற்கு கிட்டதட்ட 200 பில்லியன் டாலர் அளவில் சம்பாதித்து வருகிறது, ஜெர்மனியின் ஒட்டு மொத்த ஏற்றுமதியில் ஆட்டோமொபைல் ஏற்றுமதி மட்டும் என்பது, கிட்டதட்ட 17 சதவிகிதமாக இருப்பதாக தகவல்.

இது போக ஜெர்மனியில் செயல்பட்டு வரும் ஆட்டோமொபைல் நிறுவனங்கள் கிட்டதட்ட 7 இலட்சம் ஊழியர்களின் வாழ்வாதாரமாக விளங்கி வருகிறது, உலகின் தலைசிறந்த கார் நிறுவனங்களாக அறியப்படும் மெர்சடஸ் பென்ஸ், வோல்க்ஸ்வேகன், போர்டு உள்ளிட்ட கார் தயாரிப்புகளின் மூலப் பொருள்களுக்கு, ஜெர்மன் ஒரு ஆகச்சிறந்த தலைமையகமாக விளங்கி வருகிறது.



இந்த நிலையில் சமீப காலமாக நிலவி வரும் ஆட்டோமொபைல் சந்தைகளின் வீழ்ச்சியால் பெரும்பாலான நிறுவனங்கள் பெரும் வருமான இழப்பை சந்தித்து வருகின்றன, இதில் MG, நிஸான், பென்ஸ் உள்ளிட்ட முன்னனி நிறுவனங்களும் அடங்கும், இதனால் நிறுவனங்கள் வருமான இழப்பை தவிர்க்கவும் நிறுவனத்தின் சமநிலைக்காகவும் நிறுவனத்தில் இருந்து ஊழியர்களை பணி நீக்கம் செய்து வருகின்றன.

ஜெர்மனிக்கும் அதே நிலை தான், பல நிறுவனங்கள் தொடர்ச்சியாக வேலை நீக்கத்தை அறிவித்து வருவதால், நாடே திண்டாடி வருகிறது, ஒருவரின் வேலை நீக்கம் என்பது அவரை மட்டும் பாதிப்பது அல்ல, அந்த நிறுவனம், அவர், அவரது குடும்பம் மற்றும் நாட்டின் பொருளாதாரம் என ஒரு வட்டத்தில் சுற்றி வருகிறது, இந்த சூழலுக்கு எப்படி ஜெர்மனி தீர்வு காண போகிறது என தெரியவில்லை.

" நிறுவனங்கள் எப்படியேனும் பிழைத்துக் கொள்கிறது என்றாலும் கூட, அதை சார்ந்து இருக்கும் பொருளாதாரமும், ஊழியர்களும் தான் இதில் அதிகம் பாதிக்கப்படும் காரணிகளாக இருக்கின்றன "