General Motors Announced Layoffs - உலகளாவிய அளவில் செயல்பட்டு வடும் பிரபல ஜெனரல் மோட்டார்ஸ் ஆட்டோ மொபைல் நிறுவனம் வேலை நீக்கத்தை அறிவித்து இருக்கிறது.
General Motors Announced Layoffs - அமெரிக்காவை தலைமையிடமாக கொண்டு இயங்கும் ஜெனரல் மோட்டார்ஸ் நிறுவனம் கிட்டதட்ட 116 ஆண்டுகளாக ஆட்டோமொபைல் தயாரிப்பில் ஈடுபட்டு வருகிறது, வருடத்திற்கு உலகளாவிய அளவில் 6 மில்லியன் கார்களை தயாரித்து சந்தைப்படுத்தி வருகிறது, கடந்த நிதி ஆண்டில் ஜெனரல் மோட்டார்ஸ் நிறுவனம் உலகளாவிய அளவில் 180 பில்லியன் டாலர்களை வருவாயாக ஈட்டியது.
நிறுவனத்தின் வருவாய் உயர்ந்து இருந்தாலும் கூட நிகர வருமானமும், நிகர இலாபமும் வெகுவாக தொடர்ந்து சரிந்து வந்தது, சில நாட்களாகவே ஜெனரல் மோட்டர்ஸ் நிறுவனம் நிறுவனத்தை நிலைப்படுத்த பல்வேறு முயற்சிகள் செய்து வந்தாலும் கூட எந்த ஒரு முயற்சியும் பெரிதாக சோபிக்கவில்லை, தயாரிப்புகளை குறைத்து பார்த்தும் கூட ஒரு நிலையான வருமானத்தை நிறுவனத்தால் எட்ட முடியவில்லை.
இந்த நிலையில் தான் நிறுவனம் கலந்து ஆலோசித்து ஒரு மனதாக ஒரு முடிவை எடுத்து இருக்கிறது, அதாவது வருகின்ற நிதி ஆண்டில் கிட்டதட்ட 2 பில்லியன் அளவுக்கான செலவை குறைக்க முடிவு செய்து இருக்கிறது, அதற்கு முதற்கட்டமாக தற்போது ஜெனரல் மோட்டார்ஸ் நிறுவனத்தில் பணியில் இருக்கும் ஒரு 1000 ஊழியர்களை வேலையை விட்டு அதிரடியாக நீக்க முடிவு செய்து இருக்கிறது.
ஊழியர்கள் அவர்களது லாங் டர்ம் நடவடிக்கைகள் வைத்து இந்த வேலை நீக்கம் இருக்கலாம் என கூறப்படுகிறது, இது போக விற்பனை குறைவாக இருக்கும் சேல்ஸ் மையங்களை ஒட்டு மொத்தமாக எடுத்து விடவும் நிறுவனம் முடிவெடுத்து இருக்கிறது, உற்பத்தியையும் கிட்டதட்ட 7 சதவிகிதம் அளவிற்கு குறைக்க முடிவெடுத்து இருப்பதாக ஜெனரல் மோட்டார் நிறுவனம் அறிவித்து இருக்கிறது.