• India
```

Nissan நிறுவனத்தை அடுத்து...Ford நிறுவனத்திலும் வேலை நீக்கம் அறிவிப்பு...என்ன தான் ஆச்சு இந்த ஆட்டோமொபைல் நிறுவனங்களுக்கு...?

Ford Industry Announced LayOffs

By Ramesh

Published on:  2024-11-21 20:38:32  |    148

Ford Announced LayOffs - அமெரிக்காவின் பிரபல கார் தயாரிப்பு நிறுவனம் ஆக அறியப்படும் Ford தங்களது நிறுவனத்தில் வேலை நீக்கத்தை அறிவித்து இருக்கிறது.

Ford Announced LayOffs - 1903 யில் ஆரம்பித்து கிட்டதட்ட 121 வருடங்களாக சர்வதேச அளவில் சிறந்த கார் தயாரிப்பு நிறுவனமாக செயல்பட்டு வரும் Ford நிறுவனம், வருடத்திற்கு கிட்டத்தட்ட 45 இலட்சம் கார்களை தயாரித்து சந்தைப்படுத்தி வருகிறது, ஆட்டோமொபைல் பார்ட்ஸ்கள், நார்மல் கார்கள், Luxury கார்கள், கமெர்சியல் வாகனங்கள் என உலகளாவிய அளவில் பல வாகன தயாரிப்புகளில் Ford ஈடுபட்டு வருகிறது.

சர்வதேச அளவில் Ford நிறுவனத்தின் கீழ் கிட்ட தட்ட 1,77,000 பணியாளர்கள் பணி புரிந்து வருகின்றனர், உலகளாவிய அளவில் அதிகரித்து வரும் எலக்ட்ரிக் வாகன போட்டிகளால் Ford நிறுவனத்தில் ஒரு மிகப்பெரிய வருவாய் இழப்பு ஏற்பட்டு வருகிறது, Ford நிறுவனம் எலக்ட்ரிக் வாகன தயாரிப்பில் மிகப்பெரிய அளவில் ஈடுபட நினைத்தாலும் அதற்கு அமெரிக்க அரசின் செயல்பாடுகள் ஒத்துழைக்கவில்லை என கூறப்படுகிறது.



அமெரிக்காவில் எலான் மஸ்க் அவர்களின் Tesla போன்ற நிறுவனத்திற்கு எதிராக, Ford நிற்க வேண்டுமானால் அதற்கு அதிகப்படியான அரசின் சப்போர்ட் வேண்டும் என கூறப்படுகிறது, அது Ford நிறுவனத்திற்கு சுத்தமாக கிடைக்கவில்லையாம், மக்கள் அனைவரும் எலக்ட்ரிக் வாகனங்களுக்கு மாறிக் கொண்டு இருக்கும் போது நிறுவனம் Ford நிறுவனத்தின் எலக்ட்ரிக் கார்கள் மக்களை அந்த அளவிற்கு ஈர்க்கவில்லை.

இதனால் இந்த நிதி ஆண்டில் Ford யின் நிகர இலாபம் என்பது சற்றே ஆட்டம் கண்டு இருக்கிறது, எதிர்கால நிறுவனத்தின் சமநிலையை கருத்தில் கொண்டு Ford நிறுவனம் தற்போது வேலை நீக்கத்தை அறிவித்து இருக்கிறது, குறிப்பாக ஒட்டு மொத்த ஐரோப்பிய ஊழியர்களுள் 14% பேரை 2027 யிற்குள் பணி நீக்கம் செய்ய இருக்கிறதாம், கிட்டதட்ட இந்த மதிப்பு 4000 பேரை தாண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.